Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௯

Qur'an Surah Ya-Sin Verse 19

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا طَاۤىِٕرُكُمْ مَّعَكُمْۗ اَىِٕنْ ذُكِّرْتُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ (يس : ٣٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
ṭāirukum
طَٰٓئِرُكُم
"Your evil omen
துர்ச்சகுனம் உங்கள்
maʿakum
مَّعَكُمْۚ
(be) with you!
உங்களுடன்தான்
a-in dhukkir'tum
أَئِن ذُكِّرْتُمۚ
Is it because you are admonished?
நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா
bal
بَلْ
Nay
மாறாக
antum
أَنتُمْ
you
நீங்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
mus'rifūna
مُّسْرِفُونَ
transgressing"
வரம்பு மீறுகின்ற

Transliteration:

Qaaloo taaa'irukum ma'akum; a'in zukkirtum; bal antum qawmum musrifoon (QS. Yāʾ Sīn:19)

English Sahih International:

They said, "Your omen [i.e., fate] is with yourselves. Is it because you were reminded? Rather, you are a transgressing people." (QS. Ya-Sin, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

அதற்கு (நம் தூதர்கள்) "உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௯)

Jan Trust Foundation

அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்| “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்கள் ஆவீர்கள்.