Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௫

Qur'an Surah Ya-Sin Verse 15

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا مَآ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاۙ وَمَآ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَيْءٍۙ اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ (يس : ٣٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
mā antum
مَآ أَنتُمْ
"Not you
நீங்கள் இல்லை
illā
إِلَّا
(are) but
அன்றி
basharun
بَشَرٌ
human beings
மனிதர்கள்
mith'lunā
مِّثْلُنَا
like us
எங்களைப் போன்ற
wamā anzala
وَمَآ أَنزَلَ
and not has revealed
இறக்கவில்லை
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
min shayin
مِن شَىْءٍ
any thing
எதையும்
in antum
إِنْ أَنتُمْ
Not you
நீங்கள் இல்லை
illā
إِلَّا
(are) but
தவிர
takdhibūna
تَكْذِبُونَ
lying"
பொய் சொல்கின்றவர்களாகவே

Transliteration:

Qaaloo maaa antum illaa basharum mislunaa wa maaa anzalar Rahmaanu min shai'in in antum illaa takziboon (QS. Yāʾ Sīn:15)

English Sahih International:

They said, "You are not but human beings like us, and the Most Merciful has not revealed a thing. You are only telling lies." (QS. Ya-Sin, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) யாதொன்றையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை" என்று கூறினார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(அதற்கு அம்மக்கள்|) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறு இல்லை. ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்கின்றவர்களாகவே தவிர இல்லை.