குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௪
Qur'an Surah Ya-Sin Verse 14
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ اَرْسَلْنَآ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْٓا اِنَّآ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ (يس : ٣٦)
- idh arsalnā
- إِذْ أَرْسَلْنَآ
- When We sent
- நாம் அனுப்பியபோது
- ilayhimu
- إِلَيْهِمُ
- to them
- அவர்களிடம்
- ith'nayni
- ٱثْنَيْنِ
- two (Messengers)
- இருவரை
- fakadhabūhumā
- فَكَذَّبُوهُمَا
- but they denied both of them
- அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
- faʿazzaznā
- فَعَزَّزْنَا
- so We strengthened them
- பலப்படுத்தினோம்
- bithālithin
- بِثَالِثٍ
- with a third
- மூன்றாவது ஒருவரைக்கொண்டு
- faqālū
- فَقَالُوٓا۟
- and they said
- அவர்கள் கூறினர்
- innā
- إِنَّآ
- "Indeed We
- நிச்சயமாக நாங்கள்
- ilaykum
- إِلَيْكُم
- to you
- உங்கள் பக்கம்
- mur'salūna
- مُّرْسَلُونَ
- (are) Messengers"
- அனுப்பப்பட்ட தூதர்கள்
Transliteration:
Iz arsalnaaa ilaihimusnaini fakazzaboohumaa fa'azzaznaa bisaalisin faqaalooo innaaa ilaikum mursaloon(QS. Yāʾ Sīn:14)
English Sahih International:
When We sent to them two but they denied them, so We strengthened [them] with a third, and they said, "Indeed, we are messengers to you." (QS. Ya-Sin, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) "மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௪)
Jan Trust Foundation
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவரைக்கொண்டு பலப்படுத்தினோம். அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்.