Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௨

Qur'an Surah Ya-Sin Verse 12

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَحْنُ نُحْيِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْۗ وَكُلَّ شَيْءٍ اَحْصَيْنٰهُ فِيْٓ اِمَامٍ مُّبِيْنٍ ࣖ (يس : ٣٦)

innā naḥnu
إِنَّا نَحْنُ
Indeed We We
நிச்சயமாக நாம்தான்
nuḥ'yī
نُحْىِ
[We] give life
உயிர்ப்பிக்கின்றோம்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
(to) the dead
இறந்தவர்களை
wanaktubu
وَنَكْتُبُ
and We record
இன்னும் பதிவு செய்வோம்
mā qaddamū
مَا قَدَّمُوا۟
what they have sent before
அவர்கள் முன்னர் செய்தவற்றையும்
waāthārahum
وَءَاثَٰرَهُمْۚ
and their footprints
காலடிச் சுவடுகளை அவர்களின்
wakulla shayin
وَكُلَّ شَىْءٍ
and every thing
எல்லாவற்றையும்
aḥṣaynāhu
أَحْصَيْنَٰهُ
We have enumerated it
அதைப் பதிவு செய்துள்ளோம்
fī imāmin
فِىٓ إِمَامٍ
in a Register
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Innaa Nahnu nuhyil mawtaa wa naktubu maa qaddamoo wa aasaarahum; wa kulla shai'in ahsainaahu feee Imaamim Mubeen (QS. Yāʾ Sīn:12)

English Sahih International:

Indeed, it is We who bring the dead to life and record what they have put forth and what they left behind, and all things We have enumerated in a clear register. (QS. Ya-Sin, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கின்றோம். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௨)

Jan Trust Foundation

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.