குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௧
Qur'an Surah Ya-Sin Verse 11
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ (يس : ٣٦)
- innamā tundhiru
- إِنَّمَا تُنذِرُ
- Only you (can) warn
- நீர் எச்சரிப்பதெல்லாம்
- mani ittabaʿa
- مَنِ ٱتَّبَعَ
- (him) who follows
- எவர்/பின்பற்றினார்
- l-dhik'ra
- ٱلذِّكْرَ
- the Reminder
- இந்த வேதத்தை
- wakhashiya
- وَخَشِىَ
- and fears
- இன்னும் பயந்தார்
- l-raḥmāna
- ٱلرَّحْمَٰنَ
- the Most Gracious
- பேரருளாளனை
- bil-ghaybi
- بِٱلْغَيْبِۖ
- in the unseen
- மறைவில்
- fabashir'hu
- فَبَشِّرْهُ
- So give him glad tidings
- ஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக!
- bimaghfiratin
- بِمَغْفِرَةٍ
- of forgiveness
- மன்னிப்பைக் கொண்டும்
- wa-ajrin
- وَأَجْرٍ
- and a reward
- கூலியைக் கொண்டும்
- karīmin
- كَرِيمٍ
- noble
- கண்ணியமான
Transliteration:
Innamaa tunziru manit taba 'az-Zikra wa khashiyar Rahmaana bilghaib, fabashshirhu bimaghfiratinw-wa ajrin kareem(QS. Yāʾ Sīn:11)
English Sahih International:
You can only warn one who follows the message and fears the Most Merciful unseen. So give him good tidings of forgiveness and noble reward. (QS. Ya-Sin, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்உபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ் வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர் களுக்குத்தான். ஆகவே, இத்தகையவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௧)
Jan Trust Foundation
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவரைத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பைக் கொண்டும் கண்ணியமான கூலியைக் கொண்டும் நற்செய்தி கூறுவீராக!