اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَآ اَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُوْنَ ٧١
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- annā
- أَنَّا
- நிச்சயமாக நாம்
- khalaqnā
- خَلَقْنَا
- நாம் படைத்ததை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mimmā ʿamilat
- مِّمَّا عَمِلَتْ
- செய்தவற்றிலிருந்து
- aydīnā
- أَيْدِينَآ
- நமது கரங்கள்
- anʿāman
- أَنْعَٰمًا
- கால்நடைகளை
- fahum
- فَهُمْ
- அவர்கள்
- lahā
- لَهَا
- அவற்றுக்கு
- mālikūna
- مَٰلِكُونَ
- உரிமையாளர்களாக
நம்முடைய கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவைகளுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௧)Tafseer
وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَأْكُلُوْنَ ٧٢
- wadhallalnāhā
- وَذَلَّلْنَٰهَا
- நாம் அவற்றை பணியவைத்தோம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- famin'hā
- فَمِنْهَا
- அவற்றில்
- rakūbuhum
- رَكُوبُهُمْ
- அவர்களின் வாகனங்களும்
- wamin'hā
- وَمِنْهَا
- இன்னும் அவற்றில் இருந்து
- yakulūna
- يَأْكُلُونَ
- அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
அவைகளை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன; புசிக்கக் கூடியவைகளும் அவைகளில் இருக்கின்றன. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௨)Tafseer
وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُۗ اَفَلَا يَشْكُرُوْنَ ٧٣
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- fīhā
- فِيهَا
- இவற்றில்
- manāfiʿu
- مَنَٰفِعُ
- பலன்கள்
- wamashāribu
- وَمَشَارِبُۖ
- குடிபானங்களும்
- afalā yashkurūna
- أَفَلَا يَشْكُرُونَ
- அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வைகளும் இன்னும் பல பயன்களும் அவைகளில் இருக்கின்றன. (இவைகளுக் கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௩)Tafseer
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَ ۗ ٧٤
- wa-ittakhadhū
- وَٱتَّخَذُوا۟
- அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- ālihatan
- ءَالِهَةً
- பல கடவுள்களை
- laʿallahum yunṣarūna
- لَّعَلَّهُمْ يُنصَرُونَ
- தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
எனினும், அல்லாஹ் அல்லாதவைகளாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவைகளை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்! ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௪)Tafseer
لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَهُمْۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ٧٥
- lā yastaṭīʿūna
- لَا يَسْتَطِيعُونَ
- அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
- naṣrahum
- نَصْرَهُمْ
- உதவுவதற்கு அவர்களுக்கு
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்கள் முன்
- jundun
- جُندٌ
- ராணுவமாக
- muḥ'ḍarūna
- مُّحْضَرُونَ
- தயாராக இருக்கின்ற
அவைகளால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவைகள் இவர்களுக்கு (எதிரிடையான) படையாகக் கொண்டு வரப்படும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௫)Tafseer
فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ ۘاِنَّا نَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ ٧٦
- falā yaḥzunka
- فَلَا يَحْزُنكَ
- ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம்
- qawluhum
- قَوْلُهُمْۘ
- அவர்களின் பேச்சு
- innā naʿlamu
- إِنَّا نَعْلَمُ
- நிச்சயமாக நாம் நன்கறிவோம்
- mā yusirrūna
- مَا يُسِرُّونَ
- அவர்கள் மறைத்து பேசுவதை(யும்)
- wamā yuʿ'linūna
- وَمَا يُعْلِنُونَ
- அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
(நபியே! "நீங்கள் பொய்யர்" என) அவர்கள் உங்களைப் பற்றிக் கூறுவது உங்களைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௬)Tafseer
اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ ٧٧
- awalam yara
- أَوَلَمْ يَرَ
- பார்க்கவில்லையா?
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- annā khalaqnāhu
- أَنَّا خَلَقْنَٰهُ
- நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம்
- min nuṭ'fatin
- مِن نُّطْفَةٍ
- ஓர் இந்திரியத் துளியில் இருந்து
- fa-idhā huwa
- فَإِذَا هُوَ
- ஆனால், அவனோ
- khaṣīmun
- خَصِيمٌ
- தர்க்கம் செய்பவனாக
- mubīnun
- مُّبِينٌ
- தெளிவாக
மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௭)Tafseer
وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِيَ خَلْقَهٗۗ قَالَ مَنْ يُّحْيِ الْعِظَامَ وَهِيَ رَمِيْمٌ ٧٨
- waḍaraba
- وَضَرَبَ
- விவரிக்கின்றான்
- lanā
- لَنَا
- நமக்கு
- mathalan
- مَثَلًا
- ஓர் உதாரணத்தை
- wanasiya
- وَنَسِىَ
- அவன் மறந்துவிட்டான்
- khalqahu
- خَلْقَهُۥۖ
- தான் படைக்கப்பட்டதை
- qāla
- قَالَ
- அவன் கூறுகின்றான்
- man
- مَن
- யார்
- yuḥ'yī
- يُحْىِ
- உயிர்ப்பிப்பான்?
- l-ʿiẓāma
- ٱلْعِظَٰمَ
- எலும்புகளை
- wahiya ramīmun
- وَهِىَ رَمِيمٌ
- அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது
(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக்கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றான். அவன் தன்னை படைத்த(து யார் என்ப)தை மறந்துவிட்டு "உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?" என்று (ஓர் எலும்பை எடுத்து அதனை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கின்றான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௮)Tafseer
قُلْ يُحْيِيْهَا الَّذِيْٓ اَنْشَاَهَآ اَوَّلَ مَرَّةٍ ۗوَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمٌ ۙ ٧٩
- qul
- قُلْ
- கூறுவீராக!
- yuḥ'yīhā
- يُحْيِيهَا
- அவற்றை உயிர்ப்பிப்பான்
- alladhī ansha-ahā
- ٱلَّذِىٓ أَنشَأَهَآ
- அவற்றை உருவாக்கியவன்தான்
- awwala
- أَوَّلَ
- முதல்
- marratin
- مَرَّةٍۖ
- முறை
- wahuwa
- وَهُوَ
- இன்னும் அவன்
- bikulli
- بِكُلِّ
- எல்லா
- khalqin
- خَلْقٍ
- படைப்புகளையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(நபியே!) அதற்கு நீங்கள் கூறுங்கள்: "முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௯)Tafseer
ِۨالَّذِيْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًاۙ فَاِذَآ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ٨٠
- alladhī jaʿala
- ٱلَّذِى جَعَلَ
- எவன்/ ஏற்படுத்துகின்றான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- mina l-shajari
- مِّنَ ٱلشَّجَرِ
- மரத்தில் இருந்து
- l-akhḍari
- ٱلْأَخْضَرِ
- பச்சை
- nāran
- نَارًا
- நெருப்பை
- fa-idhā antum
- فَإِذَآ أَنتُم
- அப்போது நீங்கள்
- min'hu
- مِّنْهُ
- அதில்
- tūqidūna
- تُوقِدُونَ
- நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்
அன்றி, அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதனைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮௦)Tafseer