Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 7

Ya-Sin

(Yāʾ Sīn)

௬௧

وَاَنِ اعْبُدُوْنِيْ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٦١

wa-ani uʿ'budūnī
وَأَنِ ٱعْبُدُونِىۚ
இன்னும் என்னை வணங்குங்கள்
hādhā
هَٰذَا
இதுதான்
ṣirāṭun
صِرَٰطٌ
பாதையாகும்
mus'taqīmun
مُّسْتَقِيمٌ
நேரான
நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?) ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௧)
Tafseer
௬௨

وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا ۗاَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ ٦٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
aḍalla
أَضَلَّ
அவன் வழிகெடுத்துள்ளான்
minkum
مِنكُمْ
உங்களில்
jibillan
جِبِلًّا
படைப்புகளை
kathīran
كَثِيرًاۖ
அதிகமான
afalam takūnū
أَفَلَمْ تَكُونُوا۟
நீங்கள்இருக்கவில்லையா?
taʿqilūna
تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக
(அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்துவிட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௨)
Tafseer
௬௩

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ٦٣

hādhihi
هَٰذِهِۦ
இதுதான்
jahannamu
جَهَنَّمُ
நரகம்
allatī kuntum tūʿadūna
ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௩)
Tafseer
௬௪

اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ٦٤

iṣ'lawhā
ٱصْلَوْهَا
அதில் நீங்கள் பொசுங்குங்கள்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
bimā kuntum takfurūna
بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்
இதனை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்துவிடுங்கள்" (என்றும் கூறுவோம்). ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௪)
Tafseer
௬௫

اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَآ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ٦٥

al-yawma
ٱلْيَوْمَ
இன்று
nakhtimu
نَخْتِمُ
முத்திரையிடுவோம்
ʿalā afwāhihim
عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ
அவர்களின் வாய்களின் மீது
watukallimunā
وَتُكَلِّمُنَآ
இன்னும் நம்மிடம் பேசும்
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களின் கரங்கள்
watashhadu
وَتَشْهَدُ
இன்னும் சாட்சி சொல்லும்
arjuluhum
أَرْجُلُهُم
அவர்களின் கால்கள்
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு
அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளைப் பேசும்படி செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௫)
Tafseer
௬௬

وَلَوْ نَشَاۤءُ لَطَمَسْنَا عَلٰٓى اَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰى يُبْصِرُوْنَ ٦٦

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
laṭamasnā
لَطَمَسْنَا
குருடாக்கி இருப்போம்
ʿalā aʿyunihim
عَلَىٰٓ أَعْيُنِهِمْ
அவர்களின் கண்களை
fa-is'tabaqū
فَٱسْتَبَقُوا۟
தவறி இருப்பார்கள்
l-ṣirāṭa
ٱلصِّرَٰطَ
பாதை
fa-annā
فَأَنَّىٰ
ஆக, எப்படி
yub'ṣirūna
يُبْصِرُونَ
பார்ப்பார்கள்
நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கி விடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் எதைத்தான் பார்க்க முடியும்? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௬)
Tafseer
௬௭

وَلَوْ نَشَاۤءُ لَمَسَخْنٰهُمْ عَلٰى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِيًّا وَّلَا يَرْجِعُوْنَ ࣖ ٦٧

walaw nashāu
وَلَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
lamasakhnāhum
لَمَسَخْنَٰهُمْ
அவர்களை உட்கார வைத்திருப்போம்
ʿalā makānatihim
عَلَىٰ مَكَانَتِهِمْ
அவர்களின் இடத்திலேயே
famā is'taṭāʿū
فَمَا ٱسْتَطَٰعُوا۟
ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்
muḍiyyan
مُضِيًّا
நடப்பதற்கு(ம்)
walā yarjiʿūna
وَلَا يَرْجِعُونَ
திரும்பி வரவும் மாட்டார்கள்
நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௭)
Tafseer
௬௮

وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى الْخَلْقِۗ اَفَلَا يَعْقِلُوْنَ ٦٨

waman nuʿammir'hu
وَمَن نُّعَمِّرْهُ
நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ
nunakkis'hu
نُنَكِّسْهُ
அவரை திருப்பி விடுவோம்
fī l-khalqi
فِى ٱلْخَلْقِۖ
படைப்பில்
afalā yaʿqilūna
أَفَلَا يَعْقِلُونَ
அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௮)
Tafseer
௬௯

وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْۢبَغِيْ لَهٗ ۗاِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌ ۙ ٦٩

wamā ʿallamnāhu
وَمَا عَلَّمْنَٰهُ
நாம் அவருக்கு கற்றுத்தரவில்லை
l-shiʿ'ra
ٱلشِّعْرَ
கவிதைகளை
wamā yanbaghī
وَمَا يَنۢبَغِى
தகுதியானதும் இல்லை
lahu
لَهُۥٓۚ
அவருக்கு
in huwa
إِنْ هُوَ
இது இல்லை
illā dhik'run
إِلَّا ذِكْرٌ
அறிவுரை(யும்) அன்றி
waqur'ānun
وَقُرْءَانٌ
குர்ஆனும்
mubīnun
مُّبِينٌ
தெளிவான(து)
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசத்தையும் தவிர வேறில்லை. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௯)
Tafseer
௭௦

لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ ٧٠

liyundhira
لِّيُنذِرَ
அது எச்சரிப்பதற்காகவும்
man
مَن
எவர்
kāna
كَانَ
இருக்கின்றார்
ḥayyan
حَيًّا
உயிருள்ளவராக
wayaḥiqqa
وَيَحِقَّ
உறுதியாகி விடுவதற்காகவும்
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
ʿalā
عَلَى
மீது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
(அன்றி, இது) உயிரோடு இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்து (மரணித்தவர்களை போன்ற) நிராகரிப்பவர்கள் மீது தண்டனையை உறுதிப்படுத்துகின்றது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭௦)
Tafseer