Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 4

Ya-Sin

(Yāʾ Sīn)

௩௧

اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَيْهِمْ لَا يَرْجِعُوْنَ ٣١

alam yaraw
أَلَمْ يَرَوْا۟
அவர்கள் கவனிக்க மாட்டார்களா?
kam
كَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்திருக்கின்றோம்
qablahum
قَبْلَهُم
அவர்களுக்கு முன்னர்
mina l-qurūni
مِّنَ ٱلْقُرُونِ
தலைமுறைகளை
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ilayhim
إِلَيْهِمْ
தங்கள் பக்கம்
lā yarjiʿūna
لَا يَرْجِعُونَ
திரும்பி வரமாட்டார்கள்
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்துவிட்டோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௧)
Tafseer
௩௨

وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ ࣖ ٣٢

wa-in kullun
وَإِن كُلٌّ
(அவர்கள்) எல்லோரும் இல்லை
lammā jamīʿun
لَّمَّا جَمِيعٌ
தவிர/அனைவரும்
ladaynā
لَّدَيْنَا
நம்மிடம்
muḥ'ḍarūna
مُحْضَرُونَ
ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே
அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௨)
Tafseer
௩௩

وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ ۖاَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُوْنَ ٣٣

waāyatun
وَءَايَةٌ
அத்தாட்சி
lahumu
لَّهُمُ
அவர்களுக்கு
l-arḍu
ٱلْأَرْضُ
பூமியாகும்
l-maytatu
ٱلْمَيْتَةُ
இறந்துபோன
aḥyaynāhā
أَحْيَيْنَٰهَا
அதை நாம் உயிர்ப்பித்தோம்
wa-akhrajnā
وَأَخْرَجْنَا
நாம் வெளியாக்கினோம்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
ḥabban
حَبًّا
வித்துக்களை
famin'hu
فَمِنْهُ
அதில் இருந்துதான்
yakulūna
يَأْكُلُونَ
அவர்கள் சாப்பிடுகின்றார்கள்
இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதனை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகின்றோம். அவற்றை இவர்கள் புசிக்கின்றார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௩)
Tafseer
௩௪

وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ ٣٤

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
fīhā
فِيهَا
அதில்
jannātin
جَنَّٰتٍ
தோட்டங்களை
min nakhīlin
مِّن نَّخِيلٍ
பேரித்த மரங்கள்
wa-aʿnābin
وَأَعْنَٰبٍ
இன்னும் திராட்சைகளின்
wafajjarnā
وَفَجَّرْنَا
உதித்தோடச்செய்தோம்
fīhā
فِيهَا
அதில்
mina l-ʿuyūni
مِنَ ٱلْعُيُونِ
ஊற்றுக் கண்களை
அன்றி, அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கின்றோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௪)
Tafseer
௩௫

لِيَأْكُلُوْا مِنْ ثَمَرِهٖۙ وَمَا عَمِلَتْهُ اَيْدِيْهِمْ ۗ اَفَلَا يَشْكُرُوْنَ ٣٥

liyakulū
لِيَأْكُلُوا۟
அவர்கள் புசிப்பதற்காக
min thamarihi
مِن ثَمَرِهِۦ
அவனுடைய கனிகளில் இருந்து
wamā ʿamilathu
وَمَا عَمِلَتْهُ
இவற்றை செய்யவில்லை
aydīhim
أَيْدِيهِمْۖ
அவர்களின் கரங்கள்
afalā yashkurūna
أَفَلَا يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமேயன்றி) இவர்களுடைய கைகள் செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௫)
Tafseer
௩௬

سُبْحٰنَ الَّذِيْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ ٣٦

sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
l-azwāja
ٱلْأَزْوَٰجَ
பல வகைகளை
kullahā
كُلَّهَا
எல்லாம்
mimmā tunbitu
مِمَّا تُنۢبِتُ
முளைக்க வைக்கக்கூடியதில்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
wamin anfusihim
وَمِنْ أَنفُسِهِمْ
அவர்களிலும்
wamimmā lā yaʿlamūna
وَمِمَّا لَا يَعْلَمُونَ
அவர்கள் அறியாதவற்றிலும்
இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரையில்) அறியாத மற்றவைகளையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௬)
Tafseer
௩௭

وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖنَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ ٣٧

waāyatun
وَءَايَةٌ
இன்னும் அத்தாட்சி
lahumu
لَّهُمُ
அவர்களுக்கு
al-laylu
ٱلَّيْلُ
இரவாகும்
naslakhu
نَسْلَخُ
உரித்தெடுக்கின்றோம்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
fa-idhā hum
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
muẓ'limūna
مُّظْلِمُونَ
இருளில் ஆகிவிடுகின்றனர்
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகின்றோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௭)
Tafseer
௩௮

وَالشَّمْسُ تَجْرِيْ لِمُسْتَقَرٍّ لَّهَا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِۗ ٣٨

wal-shamsu
وَٱلشَّمْسُ
சூரியன்
tajrī
تَجْرِى
ஓடுகிறது
limus'taqarrin
لِمُسْتَقَرٍّ
இருப்பிடத்தை நோக்கி
lahā
لَّهَاۚ
தனது
dhālika
ذَٰلِكَ
அது
taqdīru
تَقْدِيرُ
ஏற்பாடாகும்
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவனுடைய
l-ʿalīmi
ٱلْعَلِيمِ
நன்கறிந்த(வன்)
தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது அனைவரையும் நன்கறிந்தவனும் மிகைத்தவனுமால் அமைக்கப்பட்டது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௮)
Tafseer
௩௯

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ ٣٩

wal-qamara
وَٱلْقَمَرَ
சந்திரனை
qaddarnāhu
قَدَّرْنَٰهُ
அதை நாம் திட்டமிட்டோம்
manāzila
مَنَازِلَ
பல தங்குமிடங்களில்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
ʿāda
عَادَ
திரும்பிவிடுகின்றது
kal-ʿur'jūni
كَٱلْعُرْجُونِ
பேரிச்ச குலையின் காய்ந்த மட்டையைப் போல்
l-qadīmi
ٱلْقَدِيمِ
பழைய
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கின்றோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௯)
Tafseer
௪௦

لَا الشَّمْسُ يَنْۢبَغِيْ لَهَآ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ ۗوَكُلٌّ فِيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ ٤٠

lā l-shamsu yanbaghī
لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى
சூரியன் ஆகுமாகாது
lahā
لَهَآ
அதற்கு
an tud'rika
أَن تُدْرِكَ
அது அடைவது
l-qamara
ٱلْقَمَرَ
சந்திரனை
walā al-laylu sābiqu
وَلَا ٱلَّيْلُ سَابِقُ
இரவு முந்திவிடாது
l-nahāri
ٱلنَّهَارِۚ
பகலை
wakullun
وَكُلٌّ
ஒவ்வொன்றும்
fī falakin
فِى فَلَكٍ
ஒரு கோளில்
yasbaḥūna
يَسْبَحُونَ
நீந்துகின்றன
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௦)
Tafseer