Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 3

Ya-Sin

(Yāʾ Sīn)

௨௧

اتَّبِعُوْا مَنْ لَّا يَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۔ ٢١

ittabiʿū
ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
man
مَن
எவர்
lā yasalukum
لَّا يَسْـَٔلُكُمْ
உங்களிடம் கேட்க மாட்டார்
ajran
أَجْرًا
கூலியை
wahum
وَهُم
அவர்கள்தான்
muh'tadūna
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்
உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். (அவர்கள் நேர்வழியைப் போதிப்பவர்கள் மாத்திரம் அன்றி) அவர்கள்தாம் நேர்வழி அடைந்தவர்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௧)
Tafseer
௨௨

وَمَا لِيَ لَآ اَعْبُدُ الَّذِيْ فَطَرَنِيْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٢٢

wamā liya
وَمَا لِىَ
எனக்கு என்ன நேர்ந்தது?
lā aʿbudu
لَآ أَعْبُدُ
நான் வணங்காமல் இருப்பதற்கு
alladhī faṭaranī
ٱلَّذِى فَطَرَنِى
என்னைப் படைத்தவனை
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்." ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௨)
Tafseer
௨௩

ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّيْ شَفَاعَتُهُمْ شَيْـًٔا وَّلَا يُنْقِذُوْنِۚ ٢٣

a-attakhidhu
ءَأَتَّخِذُ
நான் எடுத்துக் கொள்வேனா!
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
ālihatan
ءَالِهَةً
(வேறு) தெய்வங்களை
in yurid'ni
إِن يُرِدْنِ
எனக்கு நாடினால்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
biḍurrin
بِضُرٍّ
ஒரு தீங்கை
lā tugh'ni
لَّا تُغْنِ
தடுக்காது
ʿannī
عَنِّى
என்னை விட்டும்
shafāʿatuhum
شَفَٰعَتُهُمْ
அவற்றின் சிபாரிசு
shayan walā
شَيْـًٔا وَلَا
எதையும்
yunqidhūni
يُنقِذُونِ
இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
அவனையன்றி, (மற்றெதனையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்கக் கருதினால் இவைகளுடைய சிபாரிசு அதிலொன்றையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவைகளால் விடுவிக்கவும் முடியாது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௩)
Tafseer
௨௪

اِنِّيْٓ اِذًا لَّفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٢٤

innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
idhan
إِذًا
அப்போது
lafī ḍalālin
لَّفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௪)
Tafseer
௨௫

اِنِّيْٓ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِۗ ٢٥

innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
āmantu
ءَامَنتُ
நம்பிக்கை கொண்டேன்
birabbikum
بِرَبِّكُمْ
உங்கள் இறைவனை
fa-is'maʿūni
فَٱسْمَعُونِ
ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!
நிச்சயமாக நான் உங்களைப் படைத்து வளர்ப்பவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அன்று.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்" (என்று கூறினார்). ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௫)
Tafseer
௨௬

قِيْلَ ادْخُلِ الْجَنَّةَ ۗقَالَ يٰلَيْتَ قَوْمِيْ يَعْلَمُوْنَۙ ٢٦

qīla
قِيلَ
கூறப்பட்டது
ud'khuli
ٱدْخُلِ
நீர் நுழைவீராக!
l-janata
ٱلْجَنَّةَۖ
சொர்க்கத்தில்
qāla
قَالَ
அவர் கூறினார்
yālayta qawmī yaʿlamūna
يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ
என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) "நீங்கள் சுவனபதியில் நுழைவீராக!" எனக் கூறப்பட்டது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௬)
Tafseer
௨௭

بِمَا غَفَرَ لِيْ رَبِّيْ وَجَعَلَنِيْ مِنَ الْمُكْرَمِيْنَ ٢٧

bimā ghafara
بِمَا غَفَرَ
மன்னிப்பு வழங்கியதையும்
لِى
எனக்கு
rabbī
رَبِّى
என் இறைவன்
wajaʿalanī
وَجَعَلَنِى
என்னை அவன் ஆக்கியதையும்
mina l-muk'ramīna
مِنَ ٱلْمُكْرَمِينَ
கண்ணியமானவர்களில்
(சுவனபதியில் நுழைந்த) அவர் "என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என்னுடைய மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௭)
Tafseer
௨௮

۞ وَمَآ اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَاۤءِ وَمَا كُنَّا مُنْزِلِيْنَ ٢٨

wamā anzalnā
وَمَآ أَنزَلْنَا
நாம் இறக்கவில்லை
ʿalā
عَلَىٰ
மீது
qawmihi
قَوْمِهِۦ
அவருடைய மக்கள்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
min jundin
مِن جُندٍ
ஒரு படையை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இல்லை
munzilīna
مُنزِلِينَ
இறக்குபவர்களாகவும்
அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௮)
Tafseer
௨௯

اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خَامِدُوْنَ ٢٩

in kānat
إِن كَانَتْ
அது இருக்கவில்லை
illā
إِلَّا
தவிர
ṣayḥatan
صَيْحَةً
ஒரு சப்தமாகவே
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
fa-idhā hum
فَإِذَا هُمْ
ஆகவே, அப்போது அவர்கள்
khāmidūna
خَٰمِدُونَ
அழிந்து விட்டார்கள்
ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௯)
Tafseer
௩௦

يٰحَسْرَةً عَلَى الْعِبَادِۚ مَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ٣٠

yāḥasratan
يَٰحَسْرَةً
நிகழ்ந்த துக்கமே!
ʿalā l-ʿibādi
عَلَى ٱلْعِبَادِۚ
அடியார்கள் மீது
mā yatīhim
مَا يَأْتِيهِم
அவர்களிடம் வரவில்லை
min rasūlin
مِّن رَّسُولٍ
எந்த ஒரு தூதரும்
illā
إِلَّا
தவிர
kānū
كَانُوا۟
அவர்கள் இருந்தே
bihi
بِهِۦ
அவரை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக
அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நம்முடைய எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩௦)
Tafseer