Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 2

Ya-Sin

(Yāʾ Sīn)

௧௧

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ ١١

innamā tundhiru
إِنَّمَا تُنذِرُ
நீர் எச்சரிப்பதெல்லாம்
mani ittabaʿa
مَنِ ٱتَّبَعَ
எவர்/பின்பற்றினார்
l-dhik'ra
ٱلذِّكْرَ
இந்த வேதத்தை
wakhashiya
وَخَشِىَ
இன்னும் பயந்தார்
l-raḥmāna
ٱلرَّحْمَٰنَ
பேரருளாளனை
bil-ghaybi
بِٱلْغَيْبِۖ
மறைவில்
fabashir'hu
فَبَشِّرْهُ
ஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக!
bimaghfiratin
بِمَغْفِرَةٍ
மன்னிப்பைக் கொண்டும்
wa-ajrin
وَأَجْرٍ
கூலியைக் கொண்டும்
karīmin
كَرِيمٍ
கண்ணியமான
நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்உபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ் வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர் களுக்குத்தான். ஆகவே, இத்தகையவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக் கொண்டும் நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௧)
Tafseer
௧௨

اِنَّا نَحْنُ نُحْيِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْۗ وَكُلَّ شَيْءٍ اَحْصَيْنٰهُ فِيْٓ اِمَامٍ مُّبِيْنٍ ࣖ ١٢

innā naḥnu
إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
nuḥ'yī
نُحْىِ
உயிர்ப்பிக்கின்றோம்
l-mawtā
ٱلْمَوْتَىٰ
இறந்தவர்களை
wanaktubu
وَنَكْتُبُ
இன்னும் பதிவு செய்வோம்
mā qaddamū
مَا قَدَّمُوا۟
அவர்கள் முன்னர் செய்தவற்றையும்
waāthārahum
وَءَاثَٰرَهُمْۚ
காலடிச் சுவடுகளை அவர்களின்
wakulla shayin
وَكُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
aḥṣaynāhu
أَحْصَيْنَٰهُ
அதைப் பதிவு செய்துள்ளோம்
fī imāmin
فِىٓ إِمَامٍ
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கின்றோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௨)
Tafseer
௧௩

وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْيَةِۘ اِذْ جَاۤءَهَا الْمُرْسَلُوْنَۚ ١٣

wa-iḍ'rib
وَٱضْرِبْ
எடுத்துச் சொல்வீராக!
lahum
لَهُم
அவர்களுக்கு
mathalan
مَّثَلًا
உதாரணமாக
aṣḥāba l-qaryati
أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ
அந்த ஊர் வாசிகளை
idh jāahā
إِذْ جَآءَهَا
அவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்
(நபியே!) நம்முடைய தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௩)
Tafseer
௧௪

اِذْ اَرْسَلْنَآ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوْٓا اِنَّآ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ ١٤

idh arsalnā
إِذْ أَرْسَلْنَآ
நாம் அனுப்பியபோது
ilayhimu
إِلَيْهِمُ
அவர்களிடம்
ith'nayni
ٱثْنَيْنِ
இருவரை
fakadhabūhumā
فَكَذَّبُوهُمَا
அவர்கள் பொய்ப்பித்தனர் அவ்விருவரையும்
faʿazzaznā
فَعَزَّزْنَا
பலப்படுத்தினோம்
bithālithin
بِثَالِثٍ
மூன்றாவது ஒருவரைக்கொண்டு
faqālū
فَقَالُوٓا۟
அவர்கள் கூறினர்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ilaykum
إِلَيْكُم
உங்கள் பக்கம்
mur'salūna
مُّرْسَلُونَ
அனுப்பப்பட்ட தூதர்கள்
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) "மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்" என்று கூறினார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௪)
Tafseer
௧௫

قَالُوْا مَآ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاۙ وَمَآ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَيْءٍۙ اِنْ اَنْتُمْ اِلَّا تَكْذِبُوْنَ ١٥

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
mā antum
مَآ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
அன்றி
basharun
بَشَرٌ
மனிதர்கள்
mith'lunā
مِّثْلُنَا
எங்களைப் போன்ற
wamā anzala
وَمَآ أَنزَلَ
இறக்கவில்லை
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
min shayin
مِن شَىْءٍ
எதையும்
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
takdhibūna
تَكْذِبُونَ
பொய் சொல்கின்றவர்களாகவே
அதற்கவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) யாதொன்றையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை" என்று கூறினார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௫)
Tafseer
௧௬

قَالُوْا رَبُّنَا يَعْلَمُ اِنَّآ اِلَيْكُمْ لَمُرْسَلُوْنَ ١٦

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
rabbunā
رَبُّنَا
எங்கள் இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ilaykum
إِلَيْكُمْ
உங்கள் பக்கம்
lamur'salūna
لَمُرْسَلُونَ
அனுப்பப்பட்ட தூதர்கள்
அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்" என்றதுடன், ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௬)
Tafseer
௧௭

وَمَا عَلَيْنَآ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ١٧

wamā ʿalaynā
وَمَا عَلَيْنَآ
எங்கள் மீது இல்லை
illā
إِلَّا
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதை
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
"எங்களுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதையன்றி (உங்களை நிர்ப்பந்திப்பது ) எங்கள் மீது கடமையல்ல" என்றும் (கூறினார்கள்.) ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௭)
Tafseer
௧௮

قَالُوْٓا اِنَّا تَطَيَّرْنَا بِكُمْۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ ١٨

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
taṭayyarnā
تَطَيَّرْنَا
துர்ச்குனமாக கருதுகின்றோம்
bikum
بِكُمْۖ
உங்களை
la-in lam tantahū
لَئِن لَّمْ تَنتَهُوا۟
நீங்கள் விலகவில்லை என்றால்
lanarjumannakum
لَنَرْجُمَنَّكُمْ
நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம்
walayamassannakum
وَلَيَمَسَّنَّكُم
இன்னும் நிச்சயமாக உங்களை வந்தடையும்
minnā
مِّنَّا
எங்களிடமிருந்து
ʿadhābun alīmun
عَذَابٌ أَلِيمٌ
வேதனை/வலிமிகுந்த
அதற்கவர்கள் "நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கின்றோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். அன்றி, எங்களுடைய துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக்கொள்ளும்" என்று கூறினார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௮)
Tafseer
௧௯

قَالُوْا طَاۤىِٕرُكُمْ مَّعَكُمْۗ اَىِٕنْ ذُكِّرْتُمْۗ بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ١٩

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
ṭāirukum
طَٰٓئِرُكُم
துர்ச்சகுனம் உங்கள்
maʿakum
مَّعَكُمْۚ
உங்களுடன்தான்
a-in dhukkir'tum
أَئِن ذُكِّرْتُمۚ
நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா
bal
بَلْ
மாறாக
antum
أَنتُمْ
நீங்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
mus'rifūna
مُّسْرِفُونَ
வரம்பு மீறுகின்ற
அதற்கு (நம் தூதர்கள்) "உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள்" என்று கூறினார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௯)
Tafseer
௨௦

وَجَاۤءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ ٢٠

wajāa
وَجَآءَ
வந்தார்
min aqṣā
مِنْ أَقْصَا
கடைக்கோடியில் இருந்து
l-madīnati
ٱلْمَدِينَةِ
பட்டணத்தின்
rajulun
رَجُلٌ
ஓர் ஆடவர்
yasʿā
يَسْعَىٰ
விரைந்தவராக
qāla
قَالَ
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
ittabiʿū
ٱتَّبِعُوا۟
நீங்கள் பின்பற்றுங்கள்
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை
இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து "(ஹபீபுந் நஜ்ஜார்" என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: "என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨௦)
Tafseer