Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௯

Qur'an Surah Fatir Verse 9

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ الَّذِيْٓ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ كَذٰلِكَ النُّشُوْرُ (فاطر : ٣٥)

wal-lahu alladhī
وَٱللَّهُ ٱلَّذِىٓ
And Allah (is) the One Who
அல்லாஹ்தான்
arsala
أَرْسَلَ
sends
அனுப்புகின்றான்
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
the winds
காற்றுகளை
fatuthīru
فَتُثِيرُ
so that they raise
அவை கிளப்புகின்றன
saḥāban
سَحَابًا
(the) clouds
மேகத்தை
fasuq'nāhu
فَسُقْنَٰهُ
and We drive them
அதை ஓட்டி வருகிறோம்
ilā baladin
إِلَىٰ بَلَدٍ
to a land
ஊருக்கு
mayyitin
مَّيِّتٍ
dead
வறண்டுபோன
fa-aḥyaynā
فَأَحْيَيْنَا
and We revive
நாம் உயிர்ப்பிக்கின்றோம்
bihi
بِهِ
therewith
அதன்மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
அந்த பூமியை
baʿda
بَعْدَ
after
பின்னர்
mawtihā
مَوْتِهَاۚ
its death
அது வறண்டதற்கு
kadhālika
كَذَٰلِكَ
Thus
இப்படித்தான்
l-nushūru
ٱلنُّشُورُ
(will be) the Resurrection
எழுப்பப்படுவது(ம்)

Transliteration:

Wallaahul lazeee arsalar riyaaha fatuseeru shaaban fasuqnaahu ilaa baladim maiyitin fa ahyaynaa bihil arda ba'da mawtihaa; kazaalikan nushoor (QS. Fāṭir:9)

English Sahih International:

And it is Allah who sends the winds, and they stir the clouds, and We drive them to a dead land and give life thereby to the earth after its lifelessness. Thus is the resurrection. (QS. Fatir, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகின்றது. பின்னர், அவைகளை இறந்து (பட்டுப்) போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௯)

Jan Trust Foundation

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகின்றான். அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை வறண்டுபோன ஊருக்கு ஓட்டி வருகிறோம். அதன் மூலம் அந்த பூமியை அது வறண்டதற்கு பின்னர் நாம் உயிர்ப்பிக்கின்றோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் (நிகழும்).