Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௮

Qur'an Surah Fatir Verse 8

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْۤءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًاۗ فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرٰتٍۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِمَا يَصْنَعُوْنَ (فاطر : ٣٥)

afaman
أَفَمَن
Then is (he) who -
?/எவர் ஒருவர்
zuyyina
زُيِّنَ
is made fair-seeming
அலங்கரிக்கப்பட்டது
lahu
لَهُۥ
to him
அவருக்கு
sūu
سُوٓءُ
(the) evil
கெட்ட(து)
ʿamalihi
عَمَلِهِۦ
(of) his deed -
தனது செயல்
faraāhu
فَرَءَاهُ
so that he sees it
கருதினார்/அதை
ḥasanan
حَسَنًاۖ
(as) good?
அழகாக
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
For indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yuḍillu
يُضِلُّ
lets go astray
வழிகெடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடுகின்றவரை
wayahdī
وَيَهْدِى
and guides
இன்னும் நேர்வழிபடுத்துகின்றான்
man yashāu
مَن يَشَآءُۖ
whom He wills
தான் நாடுகின்றவரை
falā tadhhab
فَلَا تَذْهَبْ
So (let) not go out
ஆகவே போய்விடவேண்டாம்
nafsuka
نَفْسُكَ
your soul
உமது உயிர்
ʿalayhim
عَلَيْهِمْ
for them
அவர்கள் மீது
ḥasarātin
حَسَرَٰتٍۚ
(in) regrets
கவலைகளால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிந்தவன்
bimā yaṣnaʿūna
بِمَا يَصْنَعُونَ
of what they do
அவர்கள் செய்வதை

Transliteration:

Afaman zuyyina lahoo sooo'u 'amalihee fara aahu hasanaa; fa innal laaha yudillu mai yashaaa'u wa yahdee mai yahaaa'u falaa tazhab nafsuka 'alaihim hasaraat; innal laaha 'aleemun bimaa yasna'oon (QS. Fāṭir:8)

English Sahih International:

Then is one to whom the evil of his deed has been made attractive so he considers it good [like one rightly guided]? For indeed, Allah sends astray whom He wills and guides whom He wills. So do not let yourself perish over them in regret. Indeed, Allah is Knowing of what they do. (QS. Fatir, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒருபோதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௮)

Jan Trust Foundation

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவரை நேர்வழிபடுத்துகின்றான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட (-அழிந்துவிட) வேண்டாம். (நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.