Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௬

Qur'an Surah Fatir Verse 6

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الشَّيْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّاۗ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِۗ (فاطر : ٣٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
the Shaitaan
ஷைத்தான்
lakum
لَكُمْ
(is) to you
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
an enemy
எதிரி
fa-ittakhidhūhu
فَٱتَّخِذُوهُ
so take him
ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்!
ʿaduwwan
عَدُوًّاۚ
(as) an enemy
எதிரியாகவே
innamā yadʿū
إِنَّمَا يَدْعُوا۟
Only he invites
அவன் அழைப்பதெல்லாம்
ḥiz'bahu
حِزْبَهُۥ
his party
தனது கூட்டத்தார்களை
liyakūnū
لِيَكُونُوا۟
that they may be
அவர்கள் ஆகுவதற்காகத்தான்
min aṣḥābi l-saʿīri
مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
among (the) companions (of) the Blaze
கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக

Transliteration:

Innash shaitaana lakum 'aduwwun fattakhizoohu 'aduwwaa; innamaa yad'oo hizbahoo liyakoonoo min ashaabis sa'eer (QS. Fāṭir:6)

English Sahih International:

Indeed, Satan is an enemy to you; so take him as an enemy. He only invites his party to be among the companions of the Blaze. (QS. Fatir, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௬)

Jan Trust Foundation

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை (கட்சிக்காரர்களை) அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்.