குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௫
Qur'an Surah Fatir Verse 45
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَاۤبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا ࣖ (فاطر : ٣٥)
- walaw yuākhidhu
- وَلَوْ يُؤَاخِذُ
- And if Allah (were to) punish
- தண்டிப்பதாக இருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah (were to) punish
- அல்லாஹ்
- l-nāsa
- ٱلنَّاسَ
- the people
- மக்களை
- bimā kasabū
- بِمَا كَسَبُوا۟
- for what they have earned
- அவர்கள் செய்ததற்காக
- mā taraka
- مَا تَرَكَ
- not He would leave
- அவன் விட்டிருக்க மாட்டான்
- ʿalā ẓahrihā
- عَلَىٰ ظَهْرِهَا
- on its back
- அதன் மேற்பரப்பில்
- min dābbatin
- مِن دَآبَّةٍ
- any creature
- எந்த உயிரினத்தையும்
- walākin
- وَلَٰكِن
- But
- எனினும்
- yu-akhiruhum
- يُؤَخِّرُهُمْ
- He gives them respite
- அவன் பிற்படுத்தி வைக்கின்றான் அவர்களை
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- till a term
- தவணை வரை
- musamman
- مُّسَمًّىۖ
- appointed
- ஒரு குறிப்பிட்ட
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- And when comes
- வந்துவிட்டால்
- ajaluhum
- أَجَلُهُمْ
- their term
- அவர்களுடைய தவணை
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- of His slaves
- தனது அடியார்களை
- baṣīran
- بَصِيرًۢا
- All-Seer
- உற்றுநோக்கியவனாக
Transliteration:
Wa law yu'aakhizul laahun naasa bima kasaboo maa taraka 'alaa zahrihaa min daaabbatinw wa laakiny yu'akhkhiruhum ilaaa ajalim musamman fa izaa jaaa'a ajaluhum fa innal laaha kaana bi'ibaadihee Baseeraa(QS. Fāṭir:45)
English Sahih International:
And if Allah were to impose blame on the people for what they have earned, He would not leave upon it [i.e., the earth] any creature. But He defers them for a specified term. And when their time comes, then indeed Allah has ever been, of His servants, Seeing. (QS. Fatir, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪௫)
Jan Trust Foundation
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் மக்களை அவர்கள் செய்ததற்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் (-பூமியின் மேல்) எந்த உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும் ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கின்றான். அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கின்றான்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...