Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௪

Qur'an Surah Fatir Verse 44

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْٓا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُعْجِزَهٗ مِنْ شَيْءٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِۗ اِنَّهٗ كَانَ عَلِيْمًا قَدِيْرًا (فاطر : ٣٥)

awalam yasīrū
أَوَلَمْ يَسِيرُوا۟
Have they not traveled
அவர்கள் பயணிக்கவில்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
and seen
அவர்கள் பார்க்கவில்லை
kayfa
كَيْفَ
how
எப்படி
kāna ʿāqibatu
كَانَ عَٰقِبَةُ
was (the) end
இருந்தது/முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
(of) those who (were) before them? (were) before them?
அவர்களுக்கு முன்னுள்ளவர்களின்
wakānū
وَكَانُوٓا۟
And they were
அவர்கள் இருந்தனர்
ashadda
أَشَدَّ
stronger
கடுமையானவர்களாக
min'hum
مِنْهُمْ
than them
இவர்களை விட
quwwatan
قُوَّةًۚ
(in) power
பலத்தால்
wamā kāna
وَمَا كَانَ
But not is
இருக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
liyuʿ'jizahu
لِيُعْجِزَهُۥ
that can escape (from) Him
அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக
min shayin
مِن شَىْءٍ
any thing
எதுவும்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களில்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِۚ
and not in the earth
இன்னும் பூமியில்
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
All-Knower
நன்கறிந்தவனாக
qadīran
قَدِيرًا
All-Powerful
பேராற்றலுடையவனாக

Transliteration:

Awalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qblihim wa kaanoo ashadda minhum quwwah; wa maa kaanal laahu liyu'jizahoo min shai'in fis samaawaati wa laa fil ard; innahoo kaana 'Aleeman Qadeeraa (QS. Fāṭir:44)

English Sahih International:

Have they not traveled through the land and observed how was the end of those before them? And they were greater than them in power. But Allah is not to be caused failure [i.e., prevented] by anything in the heavens or on the earth. Indeed, He is ever Knowing and Competent. (QS. Fatir, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪௪)

Jan Trust Foundation

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பூமியில் பயணித்து, அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்க்கவில்லையா! அவர்கள் இவர்களை விட பலத்தால் கடுமையானவர்களாக இருந்தனர். அல்லாஹ் -வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அவனை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.