குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௩
Qur'an Surah Fatir Verse 43
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ۨاسْتِكْبَارًا فِى الْاَرْضِ وَمَكْرَ السَّيِّئِۗ وَلَا يَحِيْقُ الْمَكْرُ السَّيِّئُ اِلَّا بِاَهْلِهٖ ۗفَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِيْنَۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلًا ەۚ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِيْلًا (فاطر : ٣٥)
- is'tik'bāran
- ٱسْتِكْبَارًا
- (Due to) arrogance
- பெருமையடிப்பதை(யும்)
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the land
- பூமியில்
- wamakra
- وَمَكْرَ
- and plotting
- சூழ்ச்சி செய்வதையும்
- l-sayi-i
- ٱلسَّيِّئِۚ
- (of) the evil;
- தீய(து)
- walā yaḥīqu
- وَلَا يَحِيقُ
- but not encompasses
- சூழ்ந்துகொள்ளாது
- l-makru
- ٱلْمَكْرُ
- the plot
- சூழ்ச்சி
- l-sayi-u
- ٱلسَّيِّئُ
- (of) the evil
- தீய(து)
- illā
- إِلَّا
- except
- தவிர
- bi-ahlihi
- بِأَهْلِهِۦۚ
- its own people
- அதை செய்தவர்களை
- fahal yanẓurūna
- فَهَلْ يَنظُرُونَ
- Then do they wait
- இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
- illā sunnata
- إِلَّا سُنَّتَ
- except (the) way
- வழிமுறையைத் தவிர
- l-awalīna
- ٱلْأَوَّلِينَۚ
- (of) the former (people)?
- முன் சென்றோரின்
- falan tajida
- فَلَن تَجِدَ
- But never you will find
- அறவே நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّتِ
- in (the) way
- வழிமுறையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- tabdīlan
- تَبْدِيلًاۖ
- any change
- மாற்றத்தை
- walan tajida
- وَلَن تَجِدَ
- and never you will find
- இன்னும் நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّتِ
- in (the) way
- வழிமுறையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- taḥwīlan
- تَحْوِيلًا
- any alteration
- எவ்வித திருப்பத்தை
Transliteration:
Istakbaaran fil ardi wa makras sayyi'; wa laa yaheequl makrus sayyi'u illaa bi ahlih; fahal yanzuroona illaa sunnatal awwaleen; falan tajida lisunnatil laahi tabdeelanw wa lan tajida lisunnatil laahi tahweela(QS. Fāṭir:43)
English Sahih International:
[Due to] arrogance in the land and plotting of evil; but the evil plot does not encompass except its own people. Then do they await except the way [i.e., fate] of the former peoples? But you will never find in the way [i.e., established method] of Allah any change, and you will never find in the way of Allah any alteration. (QS. Fatir, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(அன்றி) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் காண மாட்டீர்கள். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீங்கள் காணமாட்டீர்கள். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்.