Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௨

Qur'an Surah Fatir Verse 42

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ جَاۤءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَاۤءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًاۙ (فاطر : ٣٥)

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
And they swore
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
by Allah
அல்லாஹ்வின் மீது
jahda aymānihim
جَهْدَ أَيْمَٰنِهِمْ
(the) strongest (of) their oaths
மிக உறுதியாக சத்தியம் செய்தல்
la-in
لَئِن
that if
வந்தால்
jāahum
جَآءَهُمْ
came to them
அவர்களிடம்
nadhīrun
نَذِيرٌ
a warner
ஓர் எச்சரிப்பாளர்
layakūnunna
لَّيَكُونُنَّ
surely they would be
நிச்சயமாக இருந்திருப்பார்கள்
ahdā
أَهْدَىٰ
more guided
மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக
min iḥ'dā l-umami
مِنْ إِحْدَى ٱلْأُمَمِۖ
than any (of) the nations
சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட
falammā
فَلَمَّا
But when
வந்த போது
jāahum
جَآءَهُمْ
came to them
அவர்களிடம்
nadhīrun
نَذِيرٌ
a warner
ஓர் எச்சரிப்பாளர்
مَّا
not
அதிகப்படுத்தவில்லை
zādahum
زَادَهُمْ
it increased them
அவர்களுக்கு
illā
إِلَّا
but
தவிர
nufūran
نُفُورًا
(in) aversion
விலகிச் செல்வதை

Transliteration:

Wa aqsamoo billaahi jahda aymaanihim la'in jaaa'ahum nazeerul layakoonunna ahdaa min ihdal umami falam maa jaaa'ahum nazeerum maa zaadahum illaa nufooraa (QS. Fāṭir:42)

English Sahih International:

And they swore by Allah their strongest oaths that if a warner came to them, they would be more guided than [any] one of the [previous] nations. But when a warner came to them, it did not increase them except in aversion (QS. Fatir, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

"எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்" என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்முடைய) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்த போது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.