Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪௧

Qur'an Surah Fatir Verse 41

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ەۚ وَلَىِٕنْ زَالَتَآ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ۗاِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا (فاطر : ٣٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yum'siku
يُمْسِكُ
upholds
தடுத்து வைத்திருக்கின்றான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
பூமியையும்
an tazūlā
أَن تَزُولَاۚ
lest they cease
இரண்டும் நீங்கிவிடாமல்
wala-in zālatā
وَلَئِن زَالَتَآ
And if they should cease
அவை இரண்டும் நீங்கிவிட்டால்
in amsakahumā
إِنْ أَمْسَكَهُمَا
not can uphold them
அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது
min aḥadin
مِنْ أَحَدٍ
any one
எவர் ஒருவரும்
min baʿdihi
مِّنۢ بَعْدِهِۦٓۚ
after Him after Him
அவனுக்குப் பின்னர்
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
ḥalīman
حَلِيمًا
Most Forbearing
மகா சகிப்பாளனாக
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக

Transliteration:

Innal laaha yumsikus samaawaati wal arda an tazoolaaa; wa la'in zaalataaa in amsa kahumaa min ahadim mim ba'dih; innahoo kaana Haleeman Ghafooraa (QS. Fāṭir:41)

English Sahih International:

Indeed, Allah holds the heavens and the earth, lest they cease. And if they should cease, no one could hold them [in place] after Him. Indeed, He is Forbearing and Forgiving. (QS. Fatir, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪௧)

Jan Trust Foundation

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.