Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௯

Qur'an Surah Fatir Verse 39

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ جَعَلَكُمْ خَلٰۤىِٕفَ فِى الْاَرْضِۗ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۗ وَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚوَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا (فاطر : ٣٥)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்தான்
jaʿalakum
جَعَلَكُمْ
made you
உங்களை ஆக்கினான்
khalāifa
خَلَٰٓئِفَ
successors
பிரதிநிதிகளாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
in the earth
பூமியில்
faman kafara
فَمَن كَفَرَ
And whoever disbelieves
எவர்/நிராகரிப்பாரோ
faʿalayhi
فَعَلَيْهِ
then upon him
அவருக்குத்தான் தீங்காகும்
kuf'ruhu
كُفْرُهُۥۖ
(is) his disbelief
அவருடைய நிராகரிப்பு
walā yazīdu
وَلَا يَزِيدُ
And not increase
அதிகப்படுத்தாது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
kuf'ruhum
كُفْرُهُمْ
their disbelief
நிராகரிப்பு அவர்களின்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
near their Lord
அவர்களின் இறைவனிடம்
illā
إِلَّا
except
தவிர
maqtan
مَقْتًاۖ
(in) hatred;
கோபத்தை
walā yazīdu
وَلَا يَزِيدُ
and not increase
அதிகப்படுத்தாது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
kuf'ruhum
كُفْرُهُمْ
their disbelief
நிராகரிப்பு அவர்களின்
illā
إِلَّا
except
தவிர
khasāran
خَسَارًا
(in) loss
நஷ்டத்தை

Transliteration:

Huwal lazee ja'alakum khalaaa'ifa fil ard; faman kafara fa'alaihi kufruhoo; wa laa yazeedul kaafireena kufruhum 'inda Rabbihim illaa maqtanw wa la yazeedul kaafireena kufruhum illaa khasaaraa (QS. Fāṭir:39)

English Sahih International:

It is He who has made you successors upon the earth. And whoever disbelieves – upon him will be [the consequence of] his disbelief. And the disbelief of the disbelievers does not increase them in the sight of their Lord except in hatred; and the disbelief of the disbelievers does not increase them except in loss. (QS. Fatir, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதே சாரும். இந்த நிராகரிப்ப வர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தை யன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. இந்த நிராகரிப் பவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩௯)

Jan Trust Foundation

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது. நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.