குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௭
Qur'an Surah Fatir Verse 37
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَاۚ رَبَّنَآ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَاۤءَكُمُ النَّذِيْرُۗ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ (فاطر : ٣٥)
- wahum
- وَهُمْ
- And they
- அவர்கள்
- yaṣṭarikhūna
- يَصْطَرِخُونَ
- will cry
- கதறுவார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- rabbanā
- رَبَّنَآ
- "Our Lord!
- எங்கள் இறைவா
- akhrij'nā
- أَخْرِجْنَا
- Bring us out;
- எங்களை வெளியேற்று
- naʿmal ṣāliḥan
- نَعْمَلْ صَٰلِحًا
- we will do righteous (deeds)
- நல்ல அமல்களை செய்வோம்
- ghayra
- غَيْرَ
- other than
- வேறு
- alladhī
- ٱلَّذِى
- (that) which
- எது
- kunnā naʿmalu
- كُنَّا نَعْمَلُۚ
- we used (to) do"
- நாங்கள் செய்து கொண்டிருந்தோம்
- awalam nuʿammir'kum
- أَوَلَمْ نُعَمِّرْكُم
- Did not We give you life long enough
- உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?
- mā yatadhakkaru
- مَّا يَتَذَكَّرُ
- that (would) receive admonition
- எது (-காலம்)/அறிவுரை பெறுகின்றார்
- fīhi
- فِيهِ
- therein
- அதில்
- man tadhakkara
- مَن تَذَكَّرَ
- whoever receives admonition?
- அறிவுரை பெறுபவர்
- wajāakumu
- وَجَآءَكُمُ
- And came to you
- இன்னும் உங்களிடம் வந்தார்
- l-nadhīru
- ٱلنَّذِيرُۖ
- the warner
- அச்சமூட்டி எச்சரிப்பவர்
- fadhūqū
- فَذُوقُوا۟
- So taste
- ஆகவே சுவையுங்கள்
- famā lilẓẓālimīna
- فَمَا لِلظَّٰلِمِينَ
- then not (is) for the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு இல்லை
- min naṣīrin
- مِن نَّصِيرٍ
- any helper
- உதவியாளர் எவரும்
Transliteration:
Wa hum yastarikhoona feehaa Rabbanaa akhrijnaa na'mal saalihan ghairal lazee kunnaa na'mal; awa lamnu 'ammirkum maa yatazak karu feehi man tazakkara wa jaaa'akumun nazeeru fazooqoo famaa lizzaalimeena min naseer(QS. Fāṭir:37)
English Sahih International:
And they will cry out therein, "Our Lord, remove us; we will do righteousness – other than what we were doing!" But did We not grant you life enough for whoever would remember therein to remember, and the warner had come to you? So taste [the punishment], for there is not for the wrongdoers any helper. (QS. Fatir, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் பெரும் சப்தமிட்டு "எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். ஆதலால், நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை" (என்று கூறுவான்). (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩௭)
Jan Trust Foundation
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்| “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதில் கதறுவார்கள்: “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்.” அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற (காலம்)வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார். ஆகவே, (இந்த வேதனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.