Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩

Qur'an Surah Fatir Verse 3

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْۗ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ (فاطر : ٣٥)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind!
மக்களே!
udh'kurū
ٱذْكُرُوا۟
Remember
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَتَ
(the) Favor
அருட்கொடையை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْۚ
upon you
உங்கள் மீதுள்ள
hal min khāliqin
هَلْ مِنْ خَٰلِقٍ
Is (there) any creator
?/படைப்பாளன் யாரும்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِ
other (than) Allah other (than) Allah
அல்லாஹ்வை அன்றி
yarzuqukum
يَرْزُقُكُم
who provides for you
உணவளிக்கின்றான்/உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
வானங்களில்இருந்தும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth?
பூமியில் இருந்தும்
لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
but
தவிர
huwa
هُوَۖ
He
அவனை
fa-annā
فَأَنَّىٰ
Then, how
ஆகவே எப்படி
tu'fakūna
تُؤْفَكُونَ
(are) you deluded?
திருப்பப்படுகிறீர்கள்

Transliteration:

Yaaa ayyuhan naasuzkuroo ni'matal laahi 'alaikum; hal min khaaliqin ghairul laahi yarzuqukum minas samaaa'i wal ard; laaa ilaaha illaa Huwa fa annaa tu'fakoon (QS. Fāṭir:3)

English Sahih International:

O mankind, remember the favor of Allah upon you. Is there any creator other than Allah who provides for you from the heaven and earth? There is no deity except Him, so how are you deluded? (QS. Fatir, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் (இல்லவே) இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகின்றீர்கள்? (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩)

Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கின்ற படைப்பாளன் (வேறு) யாரும் அல்லாஹ்வை அன்றி உண்டா? அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனைவிட்டு) திருப்பப்படுகிறீர்கள்.