Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௮

Qur'an Surah Fatir Verse 28

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ وَالدَّوَاۤبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَۗ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰۤؤُاۗ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ (فاطر : ٣٥)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And among men
மக்களிலும்
wal-dawābi
وَٱلدَّوَآبِّ
and moving creatures
கால்நடைகளிலும்
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
and the cattle
ஆடு மாடு ஒட்டகங்களிலும்
mukh'talifun
مُخْتَلِفٌ
(are) various
மாறுபட்டவையாக
alwānuhu
أَلْوَٰنُهُۥ
[their] colors
அவற்றின் நிறங்கள்
kadhālika
كَذَٰلِكَۗ
likewise
இவ்வாறே
innamā yakhshā
إِنَّمَا يَخْشَى
Only fear
அஞ்சுவதெல்லாம்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
min ʿibādihi
مِنْ عِبَادِهِ
among His slaves
அவனது அடியார்களில்
l-ʿulamāu
ٱلْعُلَمَٰٓؤُا۟ۗ
those who have knowledge
அறிஞர்கள்தான்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ghafūrun
غَفُورٌ
Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்

Transliteration:

Wa minan naasi wadda waaabbi wal an'aami mukhtalifun alwaanuhoo kazalik; innamaa yakhshal laaha min 'ibaadihil 'ulamaaa'; innal laaha 'Azeezun Ghafoor (QS. Fāṭir:28)

English Sahih International:

And among people and moving creatures and grazing livestock are various colors similarly. Only those fear Allah, from among His servants, who have knowledge. Indeed, Allah is Exalted in Might and Forgiving. (QS. Fatir, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

மனிதர்களிலும், உயிருள்ளவைகளிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களிலும் (ஏனைய) கால்நடைகளிலும் ஆடு மாடு ஒட்டகங்களிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுவதெல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.