Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௭

Qur'an Surah Fatir Verse 27

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ۗوَمِنَ الْجِبَالِ جُدَدٌ ۢبِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ (فاطر : ٣٥)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
anzala
أَنزَلَ
sends down
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
மேகத்தில் இருந்து
māan
مَآءً
water
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
then We bring forth
நாம் உற்பத்தி செய்தோம்
bihi
بِهِۦ
therewith
அதன் மூலம்
thamarātin
ثَمَرَٰتٍ
fruits
கனிகளை
mukh'talifan
مُّخْتَلِفًا
(of) various
பலதரப்பட்ட
alwānuhā
أَلْوَٰنُهَاۚ
[their] colors?
அவற்றின் நிறங்கள்
wamina l-jibāli
وَمِنَ ٱلْجِبَالِ
And in the mountains
இன்னும் மலைகளில்
judadun
جُدَدٌۢ
(are) tracts
பாதைகள்
bīḍun
بِيضٌ
white
வெண்மையான
waḥum'run
وَحُمْرٌ
and red
இன்னும் சிவப்பான
mukh'talifun
مُّخْتَلِفٌ
(of) various
பலதரப்பட்டவையாக
alwānuhā
أَلْوَٰنُهَا
[their] colors
அவற்றின் நிறங்கள்
wagharābību
وَغَرَابِيبُ
and intensely black
இன்னும் மலைகளும்
sūdun
سُودٌ
and intensely black
கருப்பான

Transliteration:

Alam tara annal laaha anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa bihee samaraatim mukhtalifan alwaanuhaa; wa minal jibaali judadum beedunw wa humrum mukhtalifun alwaanuhaa wa gharaabeebu sood (QS. Fāṭir:27)

English Sahih International:

Do you not see that Allah sends down rain from the sky, and We produce thereby fruits of varying colors? And in the mountains are tracts, white and red of varying shades and [some] extremely black. (QS. Fatir, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பின்னரும் (அல்லாஹ்வாகிய) நாம்தாம் அதனைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களை உடைய காய் கனிகளை வெளியாக்குகின்றோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவைகளும், சுத்தக் கருப்பு நிறம் உள்ளவைகளும் இருக்கின்றன. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௭)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். மலைகளில் வெண்மையான, சிவப்பான பாதைகள், (உடைய மலைகளும்) உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன. இன்னும் கருப்பான மலைகளும் உள்ளன.