குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௪
Qur'an Surah Fatir Verse 24
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۗوَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ (فاطر : ٣٥)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- arsalnāka
- أَرْسَلْنَٰكَ
- [We] have sent you
- உம்மை அனுப்பினோம்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- with the truth
- சத்தியத்தைக் கொண்டு
- bashīran
- بَشِيرًا
- (as) a bearer of glad tidings
- நற்செய்தி கூறுபவராக(வும்)
- wanadhīran
- وَنَذِيرًاۚ
- and (as) a warner
- அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
- wa-in min ummatin
- وَإِن مِّنْ أُمَّةٍ
- And not (was) any nation
- எந்த ஒரு சமுதாயமும் இல்லை
- illā khalā
- إِلَّا خَلَا
- but had passed
- சென்றிருந்தே தவிர
- fīhā
- فِيهَا
- within it
- அவர்களில்
- nadhīrun
- نَذِيرٌ
- a warner
- அச்சமூட்டி எச்சரிப்பவர்
Transliteration:
Innaa arsalnaak bil haqqi basheeranw wa nazeeraa; wa im min ummatin illaa khalaa feehaa nazeer(QS. Fāṭir:24)
English Sahih International:
Indeed, We have sent you with the truth as a bringer of good tidings and a warner. And there was no nation but that there had passed within it a warner. (QS. Fatir, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டும்) அனுப்பி இருக்கின்றோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்க வில்லை. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௪)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர.