Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௨

Qur'an Surah Fatir Verse 22

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَسْتَوِى الْاَحْيَاۤءُ وَلَا الْاَمْوَاتُۗ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَاۤءُ ۚوَمَآ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ (فاطر : ٣٥)

wamā yastawī
وَمَا يَسْتَوِى
And not equal
சமமாக மாட்டார்கள்
l-aḥyāu
ٱلْأَحْيَآءُ
(are) the living
உயிருள்ளவர்களும்
walā l-amwātu
وَلَا ٱلْأَمْوَٰتُۚ
and not the dead
இறந்தவர்களும்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
yus'miʿu
يُسْمِعُ
causes to hear
செவியேற்க வைப்பான்
man yashāu
مَن يَشَآءُۖ
whom He wills
தான் நாடுகின்றவரை
wamā anta
وَمَآ أَنتَ
and not you
நீர் இல்லை
bimus'miʿin
بِمُسْمِعٍ
can make hear
செவியேற்க வைப்பவராக
man fī l-qubūri
مَّن فِى ٱلْقُبُورِ
(those) who (are) in the graves
மண்ணறையில் உள்ளவர்களை

Transliteration:

Wa maa yastawil ahyaaa'u wa lal amwaat; innal laaha yusmi'u mai yashaaa'u wa maaa anta bimusi'im man fil quboor (QS. Fāṭir:22)

English Sahih International:

And not equal are the living and the dead. Indeed, Allah causes to hear whom He wills, but you cannot make hear those in the graves. (QS. Fatir, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கின்றான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உங்களால் முடியாது. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவரை செவியேற்க வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியேற்க வைப்பவராக நீர் இல்லை.