Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨

Qur'an Surah Fatir Verse 2

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚوَمَا يُمْسِكْۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِهٖۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (فاطر : ٣٥)

mā yaftaḥi
مَّا يَفْتَحِ
What Allah grants
எதை(யும்)/திறந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah grants
அல்லாஹ்
lilnnāsi
لِلنَّاسِ
to mankind
மக்களுக்கு
min raḥmatin
مِن رَّحْمَةٍ
of Mercy
இருந்து/அருள்(கள்)
falā mum'sika lahā
فَلَا مُمْسِكَ لَهَاۖ
then none (can) withhold it
தடுப்பவர் எவரும் இல்லை/அதை
wamā yum'sik
وَمَا يُمْسِكْ
And what He withholds
எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால்
falā mur'sila
فَلَا مُرْسِلَ
then none (can) release
விடுபவர் எவரும் இல்லை
lahu
لَهُۥ
it
அதை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦۚ
thereafter thereafter
அவனுக்குப் பின்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Maa yaftahil laahu linnaaasi mir rahmatin falaa mumsika lahaa wa maa yumsik falaa mursila lahoo mimb'dih; wa Huwal 'Azeezul Hakeem (QS. Fāṭir:2)

English Sahih International:

Whatever Allah grants to people of mercy – none can withhold it; and whatever He withholds – none can release it thereafter. And He is the Exalted in Might, the Wise. (QS. Fatir, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨)

Jan Trust Foundation

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை விடுபவர் எவரும் இல்லை. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.