Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௪

Qur'an Surah Fatir Verse 14

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَاۤءَكُمْۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْۗ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْۗ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيْرٍ ࣖ (فاطر : ٣٥)

in
إِن
If
நீங்கள்அழைத்தாலும்
tadʿūhum
تَدْعُوهُمْ
you invoke them
நீங்கள்அழைத்தாலும் அவர்களை
lā yasmaʿū
لَا يَسْمَعُوا۟
not they hear
அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள்
duʿāakum
دُعَآءَكُمْ
your call;
உங்கள் அழைப்பை
walaw samiʿū
وَلَوْ سَمِعُوا۟
and if they heard
அவர்கள் செவிமடுத்தாலும்
mā is'tajābū
مَا ٱسْتَجَابُوا۟
not they (would) respond
பதில் தர மாட்டார்கள்
lakum
لَكُمْۖ
to you
உங்களுக்கு
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
And (on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
yakfurūna
يَكْفُرُونَ
they will deny
மறுத்து விடுவார்கள்
bishir'kikum
بِشِرْكِكُمْۚ
your association
நீங்கள் இணைவைத்ததை
walā yunabbi-uka
وَلَا يُنَبِّئُكَ
And none can inform you
உமக்கு அறிவிக்க முடியாது
mith'lu
مِثْلُ
like
போன்று
khabīrin
خَبِيرٍ
(the) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

in tad'oohum laa yasma'oo du'aaa'akum wa law sami'oo mas tajaaboo lakum; wa Yawmal Qiyaamati Yakfuroona bishirkikum; wa laa yunabbi'uka mislu khabeer (QS. Fāṭir:14)

English Sahih International:

If you invoke them, they do not hear your supplication; and if they heard, they would not respond to you. And on the Day of Resurrection they will deny your association. And none can inform you like [one] Aware [of all matters]. (QS. Fatir, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அவைகளை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவைகளை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவைகளின் செயலற்ற தன்மை) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உங்களுக்கு அறிவிக்கமாட்டார். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௪)

Jan Trust Foundation

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள். அவர்கள் செவிமடுத்தாலும் உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மை செய்திகளை) அறிவிக்க முடியாது.