குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௩
Qur'an Surah Fatir Verse 13
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِۚ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُۗ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍۗ (فاطر : ٣٥)
- yūliju
- يُولِجُ
- He causes to enter
- நுழைக்கின்றான்
- al-layla
- ٱلَّيْلَ
- the night
- இரவை
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- in (to) the day
- பகலில்
- wayūliju
- وَيُولِجُ
- and He causes to enter
- இன்னும் நுழைக்கின்றான்
- l-nahāra
- ٱلنَّهَارَ
- the day
- பகலை
- fī al-layli
- فِى ٱلَّيْلِ
- in (to) the night
- இரவில்
- wasakhara
- وَسَخَّرَ
- and He has subjected
- இன்னும் வசப்படுத்தினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- the sun
- சூரியனையும்
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- and the moon
- சந்திரனையும்
- kullun
- كُلٌّ
- each
- எல்லாம்
- yajrī
- يَجْرِى
- running
- ஓடுகின்றன
- li-ajalin
- لِأَجَلٍ
- for a term
- தவணையை நோக்கி
- musamman
- مُّسَمًّىۚ
- appointed
- குறிப்பிட்ட
- dhālikumu
- ذَٰلِكُمُ
- That (is)
- அவன்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- rabbukum
- رَبُّكُمْ
- your Lord
- உங்கள் இறைவனாகிய
- lahu
- لَهُ
- for Him
- அவனுக்கே உரியது
- l-mul'ku
- ٱلْمُلْكُۚ
- (is) the Dominion
- ஆட்சி அனைத்தும்
- wa-alladhīna tadʿūna
- وَٱلَّذِينَ تَدْعُونَ
- And those whom you invoke
- நீங்கள் அழைப்பவர்கள்
- min dūnihi
- مِن دُونِهِۦ
- besides Him besides Him
- அவனையன்றி
- mā yamlikūna
- مَا يَمْلِكُونَ
- not they possess
- உரிமை பெற மாட்டார்கள்
- min qiṭ'mīrin
- مِن قِطْمِيرٍ
- even (as much as) the membrane of a date-seed
- ஒரு தொலிக்குக் கூட
Transliteration:
Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa sakhkharash shamsa wal qamara kulluny yajree li ajalim musammaa; zaalikumul lahuu Rabbukum lahul mulk; wallazeena tad'oona min doonihee maa yamlikoona min qitmeer(QS. Fāṭir:13)
English Sahih International:
He causes the night to enter the day, and He causes the day to enter the night and has subjected the sun and the moon – each running [its course] for a specified term. That is Allah, your Lord; to Him belongs sovereignty. And those whom you invoke other than Him do not possess [as much as] the membrane of a date seed. (QS. Fatir, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவைகளுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவைகளை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கின்றீர்களோ அவைகளுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௩)
Jan Trust Foundation
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவை பகலில் நுழைக்கின்றான்; பகலை இரவில் நுழைக்கின்றான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள் (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.