Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௨

Qur'an Surah Fatir Verse 12

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَسْتَوِى الْبَحْرٰنِۖ هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَاۤىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌۗ وَمِنْ كُلٍّ تَأْكُلُوْنَ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْيَةً تَلْبَسُوْنَهَا ۚوَتَرَى الْفُلْكَ فِيْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (فاطر : ٣٥)

wamā yastawī
وَمَا يَسْتَوِى
And not are alike
சமமாகாது
l-baḥrāni
ٱلْبَحْرَانِ
the two seas
இரண்டு கடல்களும்
hādhā
هَٰذَا
This
இது
ʿadhbun
عَذْبٌ
(is) fresh
சுவையான(து)
furātun
فُرَاتٌ
sweet
மதுரமான(து)
sāighun
سَآئِغٌ
pleasant
இலகுவான(து)
sharābuhu
شَرَابُهُۥ
its drink
அதை குடிப்பது
wahādhā
وَهَٰذَا
and this
இதுவோ
mil'ḥun
مِلْحٌ
salty
மிகவும் கசப்பான(து)
ujājun
أُجَاجٌۖ
(and) bitter
உவர்ப்பான(து)
wamin kullin
وَمِن كُلٍّ
And from each
எல்லாவற்றிலிருந்தும்
takulūna
تَأْكُلُونَ
you eat
சாப்பிடுகிறீர்கள்
laḥman
لَحْمًا
meat
கறியை
ṭariyyan
طَرِيًّا
fresh
பசுமையான
watastakhrijūna
وَتَسْتَخْرِجُونَ
and you extract
இன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள்
ḥil'yatan
حِلْيَةً
ornaments
ஆபரணங்களை
talbasūnahā
تَلْبَسُونَهَاۖ
you wear them
அணிகிறீர்கள் / அவற்றை
watarā
وَتَرَى
and you see
பார்க்கின்றீர்
l-ful'ka
ٱلْفُلْكَ
the ships
கப்பல்களை
fīhi
فِيهِ
in it
அவற்றில்
mawākhira
مَوَاخِرَ
cleaving
கிழித்து செல்லக்கூடியதாக
litabtaghū
لِتَبْتَغُوا۟
so that you may seek
நீங்கள் தேடுவதற்காக(வும்)
min faḍlihi
مِن فَضْلِهِۦ
of His Bounty
அவனது அருள்களிலிருந்து
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
and that you may be grateful
நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்

Transliteration:

Wa maa yastawil bahraani haaza 'azbun furaatun saaa'ighun sharaabuhoo wa haazaa milhun ujaaj; wa min kullin taakuloona lahman tariyyanw wa tastakhrijoona hilyatan talbasoonahaa wa taral fulka feehi mawaakhira litabtaghoo min fadlihee wa la'allakm tashkuroon (QS. Fāṭir:12)

English Sahih International:

And not alike are the two seas [i.e., bodies of water]. One is fresh and sweet, palatable for drinking, and one is salty and bitter. And from each you eat tender meat and extract ornaments which you wear, and you see the ships plowing through [them] that you might seek of His bounty; and perhaps you will be grateful. (QS. Fatir, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்த போதிலும்) இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கின்றீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய(முத்து, பவளம் போன்ற)வைகளையும் அவற்றிலிருந்து எடுக்கின்றீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௨)

Jan Trust Foundation

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரண்டு கடல்களும் சமமாகாது. இது (-இதன் பானம்) அதை குடிப்பதற்கு இலகுவான, மதுரமான, சுவையானதாகும். (மற்ற) இதுவோ மிகவும் கசப்பான உவர்ப்பானது. (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான கறியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்த கடல்களில்) கப்பல்களை (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கின்றீர், நீங்கள் அவனது அருள்களிலிருந்து (உங்களுக்கு விதிக்கப்பட்டதை) நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்த கப்பல்களில் உங்களை பயணிக்க வைத்தான்).