Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௧

Qur'an Surah Fatir Verse 11

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ اَزْوَاجًاۗ وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖۗ وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖٓ اِلَّا فِيْ كِتٰبٍۗ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ (فاطر : ٣٥)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
khalaqakum
خَلَقَكُم
created you
உங்களைப் படைத்தான்
min turābin
مِّن تُرَابٍ
from dust
மண்ணிலிருந்து
thumma
ثُمَّ
then
பிறகு
min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
from a sperm-drop;
இந்திரியத்திலிருந்து
thumma
ثُمَّ
then
பிறகு
jaʿalakum
جَعَلَكُمْ
He made you
உங்களைஆக்கினான்
azwājan
أَزْوَٰجًاۚ
mates
ஜோடிகளாக
wamā taḥmilu
وَمَا تَحْمِلُ
And not conceives
கர்ப்பமாவதும் இல்லை
min unthā
مِنْ أُنثَىٰ
any female
ஒரு பெண்
walā taḍaʿu
وَلَا تَضَعُ
and not gives birth
கர்ப்பம் தரிப்பதும் இல்லை
illā biʿil'mihi
إِلَّا بِعِلْمِهِۦۚ
except with His knowledge
அவன் அறிந்தே தவிர
wamā yuʿammaru
وَمَا يُعَمَّرُ
And not is granted life
வயது கொடுக்கப்படுவதில்லை
min muʿammarin
مِن مُّعَمَّرٍ
any aged person
நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும்
walā yunqaṣu
وَلَا يُنقَصُ
and not is lessened
இன்னும் குறைக்கப்படுவதில்லை
min ʿumurihi
مِنْ عُمُرِهِۦٓ
from his life
அவருடைய வயதில்
illā
إِلَّا
but
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍۚ
(is) in a Register
பதிவுப் புத்தகத்தில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
that
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
for Allah
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
(is) easy
மிக எளிதானதே

Transliteration:

Wallaahu khalaqakum min turaabin summa min nutfatin summa ja'alakum azwaajaa; wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa maa yu'ammaru mim mu'ammarinw wa laa yunqasu min 'umuriheee illaa fee kitaab; inna zaalika 'alal laahi yaseer (QS. Fāṭir:11)

English Sahih International:

And Allah created you from dust, then from a sperm-drop; then He made you mates. And no female conceives nor does she give birth except with His knowledge. And no aged person is granted [additional] life nor is his lifespan lessened but that it is in a register. Indeed, that for Allah is easy. (QS. Fatir, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து, பின்னர் (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இல்லாது எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே! (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் அவருடைய வயதில் குறைக்கப்படுவதில்லை பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே.