Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௦

Qur'an Surah Fatir Verse 10

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًاۗ اِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ۗوَالَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَمَكْرُ اُولٰۤىِٕكَ هُوَ يَبُوْرُ (فاطر : ٣٥)

man
مَن
Whoever
யார்
kāna
كَانَ
[is] desires
இருப்பாரோ
yurīdu
يُرِيدُ
[is] desires
நாடுகின்றவராக
l-ʿizata
ٱلْعِزَّةَ
the honor
கண்ணியத்தை
falillahi
فَلِلَّهِ
then for Allah
அல்லாஹ்விற்குத்தான்
l-ʿizatu
ٱلْعِزَّةُ
(is) the Honor
கண்ணியம்
jamīʿan
جَمِيعًاۚ
all
அனைத்தும்
ilayhi
إِلَيْهِ
To Him
அவன் பக்கம் தான்
yaṣʿadu
يَصْعَدُ
ascends
உயர்கின்றன
l-kalimu
ٱلْكَلِمُ
the words
சொற்கள்
l-ṭayibu
ٱلطَّيِّبُ
good
நல்ல
wal-ʿamalu
وَٱلْعَمَلُ
and the deed
இன்னும் செயல்
l-ṣāliḥu
ٱلصَّٰلِحُ
righteous
நல்ல(து)
yarfaʿuhu
يَرْفَعُهُۥۚ
raises it
அதை உயர்த்துகிறது
wa-alladhīna yamkurūna
وَٱلَّذِينَ يَمْكُرُونَ
But those who plot
சூழ்ச்சி செய்பவர்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
the evil
தீமைகளுக்கு
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
தண்டனை
shadīdun
شَدِيدٌۖ
severe
கடுமையான(து)
wamakru
وَمَكْرُ
and (the) plotting
சூழ்ச்சி
ulāika
أُو۟لَٰٓئِكَ
(of) those
அவர்களின்
huwa
هُوَ
it
அது
yabūru
يَبُورُ
(will) perish
அழிந்துபோய்விடும்

Transliteration:

Man kaana yureedul 'izzata falillaahil 'izzatu jamee'aa; ilaihi yas'adul kalimut taiyibu wal'amalus saalihu yarfa'uh; wallazeena yamkuroonas sayyiaati lahum 'azaabun shadeed; wa makru ulaaa'ika huwa yaboor (QS. Fāṭir:10)

English Sahih International:

Whoever desires honor [through power] – then to Allah belongs all honor. To Him ascends good speech, and righteous work raises it. But they who plot evil deeds will have a severe punishment, and the plotting of those – it will perish. (QS. Fatir, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார் கண்ணியத்தை நாடுகின்றவராக இருப்பாரோ (அவர் அல்லாஹ்வைக் கொண்டு கண்ணியத்தை அடையட்டும். ஏனெனில்,) அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. நல்ல செயல் அதை (மேலும்) உயர்த்துகிறது. தீமைகளுக்கு சூழ்ச்சி செய்பவர்கள் - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்.