۞ اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ەۚ وَلَىِٕنْ زَالَتَآ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ۗاِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا ٤١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yum'siku
- يُمْسِكُ
- தடுத்து வைத்திருக்கின்றான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை(யும்)
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- an tazūlā
- أَن تَزُولَاۚ
- இரண்டும் நீங்கிவிடாமல்
- wala-in zālatā
- وَلَئِن زَالَتَآ
- அவை இரண்டும் நீங்கிவிட்டால்
- in amsakahumā
- إِنْ أَمْسَكَهُمَا
- அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது
- min aḥadin
- مِنْ أَحَدٍ
- எவர் ஒருவரும்
- min baʿdihi
- مِّنۢ بَعْدِهِۦٓۚ
- அவனுக்குப் பின்னர்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- ḥalīman
- حَلِيمًا
- மகா சகிப்பாளனாக
- ghafūran
- غَفُورًا
- மகா மன்னிப்பாளனாக
வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௧)Tafseer
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ جَاۤءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَاۤءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًاۙ ٤٢
- wa-aqsamū
- وَأَقْسَمُوا۟
- சத்தியம் செய்தனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- jahda aymānihim
- جَهْدَ أَيْمَٰنِهِمْ
- மிக உறுதியாக சத்தியம் செய்தல்
- la-in
- لَئِن
- வந்தால்
- jāahum
- جَآءَهُمْ
- அவர்களிடம்
- nadhīrun
- نَذِيرٌ
- ஓர் எச்சரிப்பாளர்
- layakūnunna
- لَّيَكُونُنَّ
- நிச்சயமாக இருந்திருப்பார்கள்
- ahdā
- أَهْدَىٰ
- மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக
- min iḥ'dā l-umami
- مِنْ إِحْدَى ٱلْأُمَمِۖ
- சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட
- falammā
- فَلَمَّا
- வந்த போது
- jāahum
- جَآءَهُمْ
- அவர்களிடம்
- nadhīrun
- نَذِيرٌ
- ஓர் எச்சரிப்பாளர்
- mā
- مَّا
- அதிகப்படுத்தவில்லை
- zādahum
- زَادَهُمْ
- அவர்களுக்கு
- illā
- إِلَّا
- தவிர
- nufūran
- نُفُورًا
- விலகிச் செல்வதை
"எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்" என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்முடைய) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௨)Tafseer
ۨاسْتِكْبَارًا فِى الْاَرْضِ وَمَكْرَ السَّيِّئِۗ وَلَا يَحِيْقُ الْمَكْرُ السَّيِّئُ اِلَّا بِاَهْلِهٖ ۗفَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِيْنَۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلًا ەۚ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِيْلًا ٤٣
- is'tik'bāran
- ٱسْتِكْبَارًا
- பெருமையடிப்பதை(யும்)
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wamakra
- وَمَكْرَ
- சூழ்ச்சி செய்வதையும்
- l-sayi-i
- ٱلسَّيِّئِۚ
- தீய(து)
- walā yaḥīqu
- وَلَا يَحِيقُ
- சூழ்ந்துகொள்ளாது
- l-makru
- ٱلْمَكْرُ
- சூழ்ச்சி
- l-sayi-u
- ٱلسَّيِّئُ
- தீய(து)
- illā
- إِلَّا
- தவிர
- bi-ahlihi
- بِأَهْلِهِۦۚ
- அதை செய்தவர்களை
- fahal yanẓurūna
- فَهَلْ يَنظُرُونَ
- இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
- illā sunnata
- إِلَّا سُنَّتَ
- வழிமுறையைத் தவிர
- l-awalīna
- ٱلْأَوَّلِينَۚ
- முன் சென்றோரின்
- falan tajida
- فَلَن تَجِدَ
- அறவே நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّتِ
- வழிமுறையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- tabdīlan
- تَبْدِيلًاۖ
- மாற்றத்தை
- walan tajida
- وَلَن تَجِدَ
- இன்னும் நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّتِ
- வழிமுறையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- taḥwīlan
- تَحْوِيلًا
- எவ்வித திருப்பத்தை
(அன்றி) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் காண மாட்டீர்கள். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீங்கள் காணமாட்டீர்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௩)Tafseer
اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْٓا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ۗوَمَا كَانَ اللّٰهُ لِيُعْجِزَهٗ مِنْ شَيْءٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِۗ اِنَّهٗ كَانَ عَلِيْمًا قَدِيْرًا ٤٤
- awalam yasīrū
- أَوَلَمْ يَسِيرُوا۟
- அவர்கள் பயணிக்கவில்லையா?
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fayanẓurū
- فَيَنظُرُوا۟
- அவர்கள் பார்க்கவில்லை
- kayfa
- كَيْفَ
- எப்படி
- kāna ʿāqibatu
- كَانَ عَٰقِبَةُ
- இருந்தது/முடிவு
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- அவர்களுக்கு முன்னுள்ளவர்களின்
- wakānū
- وَكَانُوٓا۟
- அவர்கள் இருந்தனர்
- ashadda
- أَشَدَّ
- கடுமையானவர்களாக
- min'hum
- مِنْهُمْ
- இவர்களை விட
- quwwatan
- قُوَّةًۚ
- பலத்தால்
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- liyuʿ'jizahu
- لِيُعْجِزَهُۥ
- அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக
- min shayin
- مِن شَىْءٍ
- எதுவும்
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- walā fī l-arḍi
- وَلَا فِى ٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியில்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- ʿalīman
- عَلِيمًا
- நன்கறிந்தவனாக
- qadīran
- قَدِيرًا
- பேராற்றலுடையவனாக
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௪)Tafseer
وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَاۤبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا ࣖ ٤٥
- walaw yuākhidhu
- وَلَوْ يُؤَاخِذُ
- தண்டிப்பதாக இருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- bimā kasabū
- بِمَا كَسَبُوا۟
- அவர்கள் செய்ததற்காக
- mā taraka
- مَا تَرَكَ
- அவன் விட்டிருக்க மாட்டான்
- ʿalā ẓahrihā
- عَلَىٰ ظَهْرِهَا
- அதன் மேற்பரப்பில்
- min dābbatin
- مِن دَآبَّةٍ
- எந்த உயிரினத்தையும்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- yu-akhiruhum
- يُؤَخِّرُهُمْ
- அவன் பிற்படுத்தி வைக்கின்றான் அவர்களை
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- தவணை வரை
- musamman
- مُّسَمًّىۖ
- ஒரு குறிப்பிட்ட
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- வந்துவிட்டால்
- ajaluhum
- أَجَلُهُمْ
- அவர்களுடைய தவணை
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- தனது அடியார்களை
- baṣīran
- بَصِيرًۢا
- உற்றுநோக்கியவனாக
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௫)Tafseer