وَالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِۗ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِيْرٌۢ بَصِيْرٌ ٣١
- wa-alladhī
- وَٱلَّذِىٓ
- எது
- awḥaynā
- أَوْحَيْنَآ
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- mina l-kitābi
- مِنَ ٱلْكِتَٰبِ
- அதாவது, இந்தவேதம்
- huwa
- هُوَ
- அதுதான்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- சத்தியமானது
- muṣaddiqan
- مُصَدِّقًا
- உண்மைப்படுத்துகிறது
- limā bayna yadayhi
- لِّمَا بَيْنَ يَدَيْهِۗ
- தனக்கு முன்னுள்ளதை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- தனது அடியார்களை
- lakhabīrun
- لَخَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
(நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௧)Tafseer
ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚوَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚوَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُۗ ٣٢
- thumma
- ثُمَّ
- பிறகு
- awrathnā
- أَوْرَثْنَا
- நாம் கொடுத்தோம்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- இந்த வேதத்தை
- alladhīna iṣ'ṭafaynā
- ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا
- நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
- min ʿibādinā
- مِنْ عِبَادِنَاۖ
- நமது அடியார்களில்
- famin'hum
- فَمِنْهُمْ
- அவர்களில்
- ẓālimun
- ظَالِمٌ
- தீமை செய்தவரும்
- linafsihi
- لِّنَفْسِهِۦ
- தனக்குத் தானே
- wamin'hum
- وَمِنْهُم
- இன்னும் அவர்களில்
- muq'taṣidun
- مُّقْتَصِدٌ
- நடுநிலையானவரும்
- wamin'hum
- وَمِنْهُمْ
- இன்னும் அவர்களில்
- sābiqun
- سَابِقٌۢ
- முந்துகின்றவரும்
- bil-khayrāti
- بِٱلْخَيْرَٰتِ
- நன்மைகளில்
- bi-idh'ni
- بِإِذْنِ
- அனுமதிப்படி
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்வின்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- இதுதான்
- l-faḍlu
- ٱلْفَضْلُ
- சிறப்பாகும்
- l-kabīru
- ٱلْكَبِيرُ
- மாபெரும்
பின்னர், நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத் தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௨)Tafseer
جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚوَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ ٣٣
- jannātu
- جَنَّٰتُ
- சொர்க்கங்கள்
- ʿadnin
- عَدْنٍ
- அத்ன்
- yadkhulūnahā
- يَدْخُلُونَهَا
- அவர்கள் அவற்றில் நுழைவார்கள்
- yuḥallawna fīhā
- يُحَلَّوْنَ فِيهَا
- அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்/அவற்றில்
- min asāwira
- مِنْ أَسَاوِرَ
- கை காப்புகளிலிருந்து
- min dhahabin
- مِن ذَهَبٍ
- தங்கத்தினாலான
- walu'lu-an
- وَلُؤْلُؤًاۖ
- முத்தும்
- walibāsuhum
- وَلِبَاسُهُمْ
- அவர்களின் ஆடைகள்
- fīhā
- فِيهَا
- அவற்றில்
- ḥarīrun
- حَرِيرٌ
- பட்டுத்துணி
(அவர்கள்) நிலையான சுவனபதிக்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௩)Tafseer
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَذْهَبَ عَنَّا الْحَزَنَۗ اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرٌۙ ٣٤
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறுவார்கள்
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- alladhī adhhaba
- ٱلَّذِىٓ أَذْهَبَ
- எவன்/போக்கினான்
- ʿannā
- عَنَّا
- எங்களை விட்டு
- l-ḥazana
- ٱلْحَزَنَۖ
- கவலையை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbanā
- رَبَّنَا
- எங்கள் இறைவன்
- laghafūrun
- لَغَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- shakūrun
- شَكُورٌ
- நன்றியுடையவன்
அன்றி (அவர்கள்) "தங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துவதை அறிபவனுமாக இருக்கிறான்" என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௪)Tafseer
ۨالَّذِيْٓ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُغُوْبٌ ٣٥
- alladhī
- ٱلَّذِىٓ
- எவன்
- aḥallanā
- أَحَلَّنَا
- எங்களை தங்க வைத்தான்
- dāra
- دَارَ
- இல்லத்தில்
- l-muqāmati
- ٱلْمُقَامَةِ
- நிரந்தர
- min faḍlihi
- مِن فَضْلِهِۦ
- தனது அருளினால்
- lā yamassunā
- لَا يَمَسُّنَا
- எங்களுக்கு ஏற்படாது
- fīhā
- فِيهَا
- அதில்
- naṣabun
- نَصَبٌ
- சோர்வு(ம்)
- walā yamassunā
- وَلَا يَمَسُّنَا
- எங்களுக்கு ஏற்படாது
- fīhā
- فِيهَا
- அதில்
- lughūbun
- لُغُوبٌ
- களைப்பும்
"அவனே தன்னுடைய அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் யாதொரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. யாதொரு சடைவும் எங்களுக்கு ஏற்படுவதில்லை" (என்றும் துதி செய்வார்கள்). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௫)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَاۗ كَذٰلِكَ نَجْزِيْ كُلَّ كَفُوْرٍ ۚ ٣٦
- wa-alladhīna kafarū
- وَٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- nāru
- نَارُ
- நெருப்புதான்
- jahannama
- جَهَنَّمَ
- நரக
- lā yuq'ḍā
- لَا يُقْضَىٰ
- தீர்ப்பளிக்கப்படாது
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்களுக்கு
- fayamūtū
- فَيَمُوتُوا۟
- ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள்
- walā yukhaffafu
- وَلَا يُخَفَّفُ
- இன்னும் இலேசாக்கப்படாது
- ʿanhum
- عَنْهُم
- அவர்களை விட்டு
- min ʿadhābihā
- مِّنْ عَذَابِهَاۚ
- அதன் தண்டனை
- kadhālika
- كَذَٰلِكَ
- இப்படித்தான்
- najzī
- نَجْزِى
- கூலிகொடுப்போம்
- kulla kafūrin
- كُلَّ كَفُورٍ
- எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) அன்றி, அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௬)Tafseer
وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَاۚ رَبَّنَآ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَاۤءَكُمُ النَّذِيْرُۗ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ ٣٧
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- yaṣṭarikhūna
- يَصْطَرِخُونَ
- கதறுவார்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- akhrij'nā
- أَخْرِجْنَا
- எங்களை வெளியேற்று
- naʿmal ṣāliḥan
- نَعْمَلْ صَٰلِحًا
- நல்ல அமல்களை செய்வோம்
- ghayra
- غَيْرَ
- வேறு
- alladhī
- ٱلَّذِى
- எது
- kunnā naʿmalu
- كُنَّا نَعْمَلُۚ
- நாங்கள் செய்து கொண்டிருந்தோம்
- awalam nuʿammir'kum
- أَوَلَمْ نُعَمِّرْكُم
- உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா?
- mā yatadhakkaru
- مَّا يَتَذَكَّرُ
- எது (-காலம்)/அறிவுரை பெறுகின்றார்
- fīhi
- فِيهِ
- அதில்
- man tadhakkara
- مَن تَذَكَّرَ
- அறிவுரை பெறுபவர்
- wajāakumu
- وَجَآءَكُمُ
- இன்னும் உங்களிடம் வந்தார்
- l-nadhīru
- ٱلنَّذِيرُۖ
- அச்சமூட்டி எச்சரிப்பவர்
- fadhūqū
- فَذُوقُوا۟
- ஆகவே சுவையுங்கள்
- famā lilẓẓālimīna
- فَمَا لِلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களுக்கு இல்லை
- min naṣīrin
- مِن نَّصِيرٍ
- உதவியாளர் எவரும்
அதில் அவர்கள் பெரும் சப்தமிட்டு "எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரையில் நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். ஆதலால், நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை" (என்று கூறுவான்). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௭)Tafseer
اِنَّ اللّٰهَ عَالِمُ غَيْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٣٨
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿālimu
- عَٰلِمُ
- நன்கறிந்தவன்
- ghaybi
- غَيْبِ
- மறைவானவற்றை
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- மற்றும் பூமி(யில் உள்ள)
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bidhāti l-ṣudūri
- بِذَاتِ ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவற்றை
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவைகளையும் நன்கறிந்தவன். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௮)Tafseer
هُوَ الَّذِيْ جَعَلَكُمْ خَلٰۤىِٕفَ فِى الْاَرْضِۗ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗۗ وَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚوَلَا يَزِيْدُ الْكٰفِرِيْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ٣٩
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- அவன்தான்
- jaʿalakum
- جَعَلَكُمْ
- உங்களை ஆக்கினான்
- khalāifa
- خَلَٰٓئِفَ
- பிரதிநிதிகளாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۚ
- பூமியில்
- faman kafara
- فَمَن كَفَرَ
- எவர்/நிராகரிப்பாரோ
- faʿalayhi
- فَعَلَيْهِ
- அவருக்குத்தான் தீங்காகும்
- kuf'ruhu
- كُفْرُهُۥۖ
- அவருடைய நிராகரிப்பு
- walā yazīdu
- وَلَا يَزِيدُ
- அதிகப்படுத்தாது
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- kuf'ruhum
- كُفْرُهُمْ
- நிராகரிப்பு அவர்களின்
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْ
- அவர்களின் இறைவனிடம்
- illā
- إِلَّا
- தவிர
- maqtan
- مَقْتًاۖ
- கோபத்தை
- walā yazīdu
- وَلَا يَزِيدُ
- அதிகப்படுத்தாது
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- kuf'ruhum
- كُفْرُهُمْ
- நிராகரிப்பு அவர்களின்
- illā
- إِلَّا
- தவிர
- khasāran
- خَسَارًا
- நஷ்டத்தை
அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதே சாரும். இந்த நிராகரிப்ப வர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தை யன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. இந்த நிராகரிப் பவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௯)Tafseer
قُلْ اَرَاَيْتُمْ شُرَكَاۤءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗاَرُوْنِيْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ٤٠
- qul
- قُلْ
- கூறுவீராக!
- ara-aytum
- أَرَءَيْتُمْ
- நீங்கள் அறிவியுங்கள்
- shurakāakumu
- شُرَكَآءَكُمُ
- இணை தெய்வங்களை உங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- tadʿūna
- تَدْعُونَ
- நீங்கள் அழைக்கின்றீர்கள்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- arūnī
- أَرُونِى
- எனக்கு காண்பியுங்கள்
- mādhā
- مَاذَا
- எதை
- khalaqū
- خَلَقُوا۟
- படைத்தார்கள்
- mina l-arḍi
- مِنَ ٱلْأَرْضِ
- பூமியில்
- am
- أَمْ
- அல்லது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- shir'kun
- شِرْكٌ
- பங்கு
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- am
- أَمْ
- அல்லது
- ātaynāhum
- ءَاتَيْنَٰهُمْ
- அவர்களுக்கு நாம் கொடுத்தோம்
- kitāban
- كِتَٰبًا
- ஒரு வேதத்தை
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- ʿalā bayyinatin
- عَلَىٰ بَيِّنَتٍ
- தெளிவான சான்றின் மீது
- min'hu
- مِّنْهُۚ
- அது விஷயத்தில்
- bal
- بَلْ
- மாறாக
- in yaʿidu
- إِن يَعِدُ
- வாக்களிப்பதில்லை
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
- baʿḍuhum
- بَعْضُهُم
- அவர்களில் சிலர்
- baʿḍan
- بَعْضًا
- சிலருக்கு
- illā ghurūran
- إِلَّا غُرُورًا
- ஏமாற்றத்தைத் தவிர
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவைகளைப் பற்றி நீங்கள் கவனித் தீர்களா? அவை பூமியில் எதனையும் படைத்திருக்கின்றனவா? அதனை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவைகளுக்குப் பங்குண்டா? அல்லது (அவைகளைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கக்கூடிய யாதொரு வேதத்தையும் நாம் அவைகளுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக் காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே அன்றி வேறில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪௦)Tafseer