Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௪

Qur'an Surah Saba Verse 54

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَۙ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُۗ اِنَّهُمْ كَانُوْا فِيْ شَكٍّ مُّرِيْبٍ ࣖ (سبإ : ٣٤)

waḥīla
وَحِيلَ
And a barrier will be placed
தடுக்கப்பட்டுவிடும்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு இடையிலும்
wabayna
وَبَيْنَ
and between
இடையிலும்
mā yashtahūna
مَا يَشْتَهُونَ
what they desire
அவர்கள் விரும்புவதற்கு
kamā
كَمَا
as
போன்று
fuʿila
فُعِلَ
was done
செய்யப்பட்டதை
bi-ashyāʿihim
بِأَشْيَاعِهِم
with their kind
அவர்கள் கூட்டங்களுக்கு
min qablu
مِّن قَبْلُۚ
before before
இதற்கு முன்னர்
innahum
إِنَّهُمْ
Indeed, they
நிச்சயமாக இவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
fī shakkin
فِى شَكٍّ
in doubt
சந்தேகத்தில்தான்
murībin
مُّرِيبٍۭ
disquieting
பெரிய

Transliteration:

Wa heela bainahum wa baina maa yashtahoona kamaa fu'ila bi-ashyaa'ihim min qabl; innahum kaanoo fee shakkim mureeb (QS. Sabaʾ:54)

English Sahih International:

And prevention will be placed between them and what they desire, as was done with their kind before. Indeed, they were in disquieting doubt [i.e., denial]. (QS. Saba, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவைகளுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டு விடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்கள் இனத்தாருக்குச் செய்யப்பட்டது. ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫௪)

Jan Trust Foundation

மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு முன்னர் அவர்களின் (முந்தைய) கூட்டங்களுக்கு செய்யப்பட்டதைப் போன்று அவர்களுக்கு இடையிலும் அவர்கள் விரும்புவதற்கு இடையிலும் தடுக்கப்பட்டுவிடும். நிச்சயமாக இவர்கள் (உலகில் வாழ்ந்தபோது மறுமையைப் பற்றி) பெரிய சந்தேகத்தில்தான் இருந்தனர்.பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...