Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௩

Qur'an Surah Saba Verse 53

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُۚ وَيَقْذِفُوْنَ بِالْغَيْبِ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ (سبإ : ٣٤)

waqad
وَقَدْ
And certainly
திட்டமாக
kafarū
كَفَرُوا۟
they disbelieved
மறுத்து விட்டனர்
bihi
بِهِۦ
in it
இதை
min qablu
مِن قَبْلُۖ
before before
முன்னர்
wayaqdhifūna
وَيَقْذِفُونَ
And they utter conjectures
அவர்கள் அதிகம் பேசுகின்றனர்
bil-ghaybi
بِٱلْغَيْبِ
about the unseen
கற்பனையாக
min makānin
مِن مَّكَانٍۭ
from a place
இடத்திலிருந்து
baʿīdin
بَعِيدٍ
far off
வெகு தூரமான

Transliteration:

Wa qad kafaroo bihee min qablu wa yaqzifoona bilghaibi mim makaanim ba'eed (QS. Sabaʾ:53)

English Sahih International:

And they had already disbelieved in it before and would assault the unseen from a place far away. (QS. Saba, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னரோ, இவர்கள் அதனை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫௩)

Jan Trust Foundation

ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக (இதற்கு) முன்னர் அவர்கள் இதை (-இந்த வேதத்தை) மறுத்து விட்டனர். அவர்கள் (சத்தியத்தை விட்டு) வெகு தூரமான இடத்திலிருந்து இருந்துகொண்டு கற்பனையாக அதிகம் பேசுகின்றனர்.