Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫௦

Qur'an Surah Saba Verse 50

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَآ اَضِلُّ عَلٰى نَفْسِيْۚ وَاِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوْحِيْٓ اِلَيَّ رَبِّيْۗ اِنَّهٗ سَمِيْعٌ قَرِيْبٌ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
in ḍalaltu
إِن ضَلَلْتُ
"If I err
நான் வழிகெட்டால்
fa-innamā aḍillu
فَإِنَّمَآ أَضِلُّ
then only I will err
நான் வழிகெடுவதெல்லாம்
ʿalā nafsī
عَلَىٰ نَفْسِىۖ
against myself
எனக்குத்தான் தீங்காக அமையும்
wa-ini ih'tadaytu
وَإِنِ ٱهْتَدَيْتُ
But if I am guided
நான் நேர்வழி பெற்றால்
fabimā yūḥī
فَبِمَا يُوحِىٓ
then it is by what reveals
வஹீ அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும்
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
rabbī
رَبِّىٓۚ
my Lord
என் இறைவன்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
qarībun
قَرِيبٌ
Ever-Near"
மிக சமீபமானவன்

Transliteration:

Qul in dalaltu fainnamaaa adillu 'alaa nafsee wa inih-tadaitu fabimaa yoohee ilaiya Rabbee; innahoo Samee'un Qareeb (QS. Sabaʾ:50)

English Sahih International:

Say, "If I should err, I would only err against myself. But if I am guided, it is by what my Lord reveals to me. Indeed, He is Hearing and near." (QS. Saba, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் வழி தவறியிருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹீ மூலமாக அறிவித் ததன் காரணமாகவேயாகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் (அனைத்திற்கும்) சமீபமானவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

கூறுவீராக| “நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு “வஹீ” மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நான் வழிகெட்டால் நான் வழிகெடுவதெல்லாம் எனக்குத்தான் தீங்காக அமையும். நான் நேர்வழி பெற்றால் (அது) என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும். (என் இறைவன் எனக்கு அறிவிக்கும் வேதத்தினால் நான் நேர்வழி பெறுகிறேன்.) நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், மிக சமீபமானவன்.