Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௭

Qur'an Surah Saba Verse 47

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ ۚوَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
mā sa-altukum
مَا سَأَلْتُكُم
"Not I ask you
எதை நான் உங்களிடம் கேட்டேனோ
min ajrin
مِّنْ أَجْرٍ
for any payment
கூலியாக
fahuwa lakum
فَهُوَ لَكُمْۖ
but it (is) for you
அது உங்களுக்கே
in ajriya
إِنْ أَجْرِىَ
Not (is) my payment
என் கூலி இல்லை
illā
إِلَّا
but
தவிர
ʿalā
عَلَى
from
மீதே
l-lahi
ٱللَّهِۖ
Allah
அல்லாஹ்வின்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) over all things
அனைத்தின் மீதும்
shahīdun
شَهِيدٌ
a Witness"
சாட்சியாளன்

Transliteration:

Qul maa sa-altukum min ajrin fahuwa lakum in ajriya illaa 'alal laahi wa Huwa 'alaa kullin shai-in Shaheed (QS. Sabaʾ:47)

English Sahih International:

Say, "Whatever payment I might have asked of you – it is yours. My payment is only from Allah, and He is, over all things, Witness." (QS. Saba, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களிடத்தில் யாதொரு கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்தையும் அறியக் கூடியவனாக இருக்கின்றான். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௭)

Jan Trust Foundation

கூறுவீராக| “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நான் எதை கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே. (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லையே!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்.