Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௫

Qur'an Surah Saba Verse 45

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَآ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِيْۗ فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ (سبإ : ٣٤)

wakadhaba
وَكَذَّبَ
And denied
பொய்ப்பித்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
those who (were) before them (were) before them
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
wamā balaghū
وَمَا بَلَغُوا۟
and not they have attained
அடையவில்லை
miʿ'shāra mā ātaynāhum
مِعْشَارَ مَآ ءَاتَيْنَٰهُمْ
a tenth (of) what We (had) given them
அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட)
fakadhabū
فَكَذَّبُوا۟
But they denied
(இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர்
rusulī
رُسُلِىۖ
My Messengers
எனது தூதர்களை
fakayfa
فَكَيْفَ
so how
எப்படி
kāna
كَانَ
was
இருந்தது
nakīri
نَكِيرِ
My rejection?
எனது மாற்றம்

Transliteration:

Wa kazzabal lazeena min qablihim wa maa balaghoo mi'shaara maaa aatainaahum fakazzaboo Rusulee; fakaifa kaana nakeer (QS. Sabaʾ:45)

English Sahih International:

And those before them denied, and they [i.e., the people of Makkah] have not attained a tenth of what We had given them. But they [i.e., the former peoples] denied My messengers, so how [terrible] was My reproach. (QS. Saba, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் (அவர்களிடம் அனுப்பப்பட்ட நம்முடைய தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள் ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நமது தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களா?) (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்திய கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று பாருங்கள்)!