குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௨
Qur'an Surah Saba Verse 42
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ۗوَنَقُوْلُ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِيْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ (سبإ : ٣٤)
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- But today
- இன்றைய தினம்
- lā yamliku
- لَا يَمْلِكُ
- not possess power
- உரிமை பெறமாட்டார்
- baʿḍukum
- بَعْضُكُمْ
- some of you
- உங்களில் சிலர்
- libaʿḍin
- لِبَعْضٍ
- on others
- சிலருக்கு
- nafʿan
- نَّفْعًا
- to benefit
- நன்மைசெய்வதற்கோ
- walā ḍarran
- وَلَا ضَرًّا
- and not to harm
- தீமை செய்வதற்கோ
- wanaqūlu
- وَنَقُولُ
- and We will say
- நாம் கூறுவோம்
- lilladhīna ẓalamū
- لِلَّذِينَ ظَلَمُوا۟
- to those who wronged
- அநியாயக்காரர்களுக்கு
- dhūqū
- ذُوقُوا۟
- "Taste
- நீங்கள் சுவையுங்கள்
- ʿadhāba l-nāri
- عَذَابَ ٱلنَّارِ
- (the) punishment (of) the Fire
- நரக வேதனையை
- allatī kuntum bihā tukadhibūna
- ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
- which you used to [it] deny"
- நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த
Transliteration:
Fal Yawma laa yamliku ba'dukum liba'din naf'anw wa laa darraa; wa naqoolu lilzeena zalamoo zooqoo 'azaaban Naaril latee kuntum bihaa tukazziboon(QS. Sabaʾ:42)
English Sahih International:
But today [i.e., the Day of Judgement] you do not hold for one another [the power of] benefit or harm, and We will say to those who wronged, "Taste the punishment of the Fire, which you used to deny." (QS. Saba, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். அன்றி (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி "நீங்கள் (நம்முடைய வேதனையைப் பொய்யாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்" எனக் கூறுவோம். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௨)
Jan Trust Foundation
“இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்” நாம் கூறுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக வேதனையை சுவையுங்கள்.