Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௬

Qur'an Surah Saba Verse 36

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّ رَبِّيْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
yabsuṭu
يَبْسُطُ
extends
விசாலமாக தருகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
the provision
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
for whom He wills
அவன் நாடுகின்றவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُ
and restricts
இன்னும் சுருக்கி கொடுக்கின்றான்
walākinna
وَلَٰكِنَّ
but
என்றாலும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
[the] people
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know"
அறியமாட்டார்கள்

Transliteration:

Qul inna Rabbee yabsutur rizqa limai yashaaa'u wa yaqdiru wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. Sabaʾ:36)

English Sahih International:

Say, "Indeed, my Lord extends provision for whom He wills and restricts [it], but most of the people do not know." (QS. Saba, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்குப் பொருளை அதிகமாகவும் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகின்றான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்வதில்லை." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக தருகின்றான். (நாடுகின்றவர்களுக்கு) சுருக்கி கொடுக்கின்றான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மை தத்துவத்தை) அறியமாட்டார்கள்.