Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௫

Qur'an Surah Saba Verse 35

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًاۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ (سبإ : ٣٤)

waqālū
وَقَالُوا۟
And they say
அவர்கள் கூறினர்
naḥnu
نَحْنُ
"We
நாங்கள்
aktharu
أَكْثَرُ
(have) more
அதிகமானவர்கள்
amwālan
أَمْوَٰلًا
wealth
செல்வங்களாலும்
wa-awlādan
وَأَوْلَٰدًا
and children
பிள்ளைகளாலும்
wamā naḥnu bimuʿadhabīna
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
and not we will be punished"
ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.

Transliteration:

Wa qaaloo nahnu aksaru amwaalanw wa awlaadanw wa maa nahnu bimu 'azzabeen (QS. Sabaʾ:35)

English Sahih International:

And they said, "We are more [than the believers] in wealth and children, and we are not to be punished." (QS. Saba, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அன்றி "நாங்கள் அதிகமான பொருளையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்" என்று கூறினர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

இன்னும்| “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் (உங்களை விட இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது எங்கள் மீது இவ்வுலகில் இறைவன் செய்த அருள்.) ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.