Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௪

Qur'an Surah Saba Verse 34

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا فِيْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ ِالَّا قَالَ مُتْرَفُوْهَآ ۙاِنَّا بِمَآ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ (سبإ : ٣٤)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
fī qaryatin
فِى قَرْيَةٍ
to a town
ஓர் ஊரில்
min nadhīrin
مِّن نَّذِيرٍ
any warner
எச்சரிப்பாளரை
illā
إِلَّا
but
தவிர
qāla
قَالَ
said
கூறியே
mut'rafūhā
مُتْرَفُوهَآ
its wealthy ones
அதன் சுகவாசிகள்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
bimā
بِمَآ
in what
எதைக்கொண்டு
ur'sil'tum bihi
أُرْسِلْتُم بِهِۦ
you have been sent with
நீங்கள் அனுப்பப்பட்டீர்கள்/அதை
kāfirūna
كَٰفِرُونَ
(are) disbelievers"
நிராகரிக்கின்றோம்

Transliteration:

Wa maaa arsalnaa' fee qaryatim min nazeerin illaa qaala mutrafooaa innaa bimaaa ursiltum bihee kaafiroon (QS. Sabaʾ:34)

English Sahih International:

And We did not send into a city any warner except that its affluent said, "Indeed we, in that with which you were sent, are disbelievers." (QS. Saba, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

நாம் நம்முடைய அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதரை எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) "நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை. (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஓர் ஊரில் நாம் எச்சரிப்பாளரை அனுப்பவில்லை, அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று (அவர்களிடம்) கூறியே தவிர. (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கின்றனர்.)