குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௩
Qur'an Surah Saba Verse 33
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّيْلِ وَالنَّهَارِ اِذْ تَأْمُرُوْنَنَآ اَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗٓ اَنْدَادًا ۗوَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَۗ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِيْٓ اَعْنَاقِ الَّذِيْنَ كَفَرُوْاۗ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ (سبإ : ٣٤)
- waqāla
- وَقَالَ
- And will say
- கூறுவார்கள்
- alladhīna us'tuḍ'ʿifū
- ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
- those who were oppressed
- பலவீனர்கள்
- lilladhīna is'takbarū
- لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
- to those who were arrogant
- பெருமை அடித்தவர்களுக்கு
- bal
- بَلْ
- "Nay
- மாறாக
- makru
- مَكْرُ
- (it was) a plot
- சூழ்ச்சியாகும்
- al-layli
- ٱلَّيْلِ
- (by) night
- இரவிலும்
- wal-nahāri
- وَٱلنَّهَارِ
- and (by) day
- பகலிலும்
- idh tamurūnanā
- إِذْ تَأْمُرُونَنَآ
- when you were ordering us
- நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள்
- an nakfura
- أَن نَّكْفُرَ
- that we disbelieve
- நாங்கள் நிராகரிப்பதற்கு(ம்)
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wanajʿala
- وَنَجْعَلَ
- and we set up
- நாங்கள்ஏற்படுத்துவதற்கும்
- lahu
- لَهُۥٓ
- for Him
- அவனுக்கு
- andādan
- أَندَادًاۚ
- equals"
- இணைகளை
- wa-asarrū
- وَأَسَرُّوا۟
- But they will conceal
- இன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள்
- l-nadāmata
- ٱلنَّدَامَةَ
- the regret
- துக்கத்தை
- lammā ra-awū
- لَمَّا رَأَوُا۟
- when they see
- அவர்கள் கண்ணால் காணும்போது
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We will put
- நாம் ஆக்குவோம்
- l-aghlāla
- ٱلْأَغْلَٰلَ
- shackles
- (சங்கிலி)விலங்குகளை
- fī aʿnāqi
- فِىٓ أَعْنَاقِ
- on (the) necks
- கழுத்துகளில்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
- (of) those who disbelieved
- நிராகரித்தவர்களின்
- hal yuj'zawna
- هَلْ يُجْزَوْنَ
- Will they be recompensed
- கூலி கொடுக்கப்படுவார்களா?
- illā mā kānū yaʿmalūna
- إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
- except (for) what they used to do?
- தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே
Transliteration:
Wa qaalal lazeenastud'ifoo lillazeenas takbaroo bal makrul laili wannahaari iz taamuroonanaaa an nakfura billaahi wa naj'ala lahooo andaadaa; wa asarrun nadaamata lammaa ra awul 'azaab; wa ja'alnal aghlaala feee a'naaqil lazeena kafaroo; hal yujzawna illaa maa kanoo ya'maloon(QS. Sabaʾ:33)
English Sahih International:
Those who were oppressed will say to those who were arrogant, "Rather, [it was your] conspiracy of night and day when you were ordering us to disbelieve in Allah and attribute to Him equals." But they will [all] confide regret when they see the punishment; and We will put shackles on the necks of those who disbelieved. Will they be recompensed except for what they used to do? (QS. Saba, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந் தவர்களை நோக்கி "என்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு அவனுக்கு இணைவைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?" என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். ஆனால், நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியையன்றி மற்றெதுவும் கொடுக்கப் படுவார்களா? (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௩)
Jan Trust Foundation
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பலவீனர்கள் பெருமை அடித்தவர்களுக்கு கூறுவார்கள்: மாறாக, (இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் எங்களுக்கு) செய்த சூழ்ச்சியாகும். நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணை (தெய்வங்)களை நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் (அனைவரும்) வேதனையை கண்ணால் காணும்போது துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துகளில் விலங்குகளை நாம் ஆக்குவோம். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர (வேறு எதற்கும்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?