Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௨

Qur'an Surah Saba Verse 32

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْٓا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰى بَعْدَ اِذْ جَاۤءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِيْنَ (سبإ : ٣٤)

qāla
قَالَ
Will say
கூறுவார்கள்
alladhīna is'takbarū
ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
those who were arrogant
பெருமை அடித்தவர்கள்
lilladhīna us'tuḍ'ʿifū
لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟
to those who were oppressed
பலவீனர்களுக்கு
anaḥnu
أَنَحْنُ
"Did we
நாங்களா?
ṣadadnākum
صَدَدْنَٰكُمْ
avert you
உங்களை தடுத்தோம்
ʿani l-hudā
عَنِ ٱلْهُدَىٰ
from the guidance
நேர்வழியை விட்டும்
baʿda idh
بَعْدَ إِذْ
after when
வந்த பின்னர்
jāakum
جَآءَكُمۖ
it had come to you?
உங்களிடம்
bal
بَلْ
Nay
மாறாக
kuntum
كُنتُم
you were
நீங்கள்தான் இருந்தீர்கள்
muj'rimīna
مُّجْرِمِينَ
criminals"
குற்றவாளிகளாக

Transliteration:

Qaalal lazeenas takbaroo lillazeenas tud'ifooo anahnu sadadnaakum 'anil hudaa ba'da iz jaaa'akum bal kuntum mujrimeen (QS. Sabaʾ:32)

English Sahih International:

Those who were arrogant will say to those who were oppressed, "Did we avert you from guidance after it had come to you? Rather, you were criminals." (QS. Saba, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி "உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்துக் கொண்டோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளானீர்கள்" என்று கூறுவார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெருமை அடித்தவர்கள் (-தலைவர்கள்) பலவீனர்களுக்கு (-தங்களை பின்பற்றியவர்களுக்கு) கூறுவார்கள்: நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பாவிகளாக) இருந்தீர்கள்.