Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௧

Qur'an Surah Saba Verse 31

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِيْ بَيْنَ يَدَيْهِۗ وَلَوْ تَرٰىٓ اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْۖ يَرْجِعُ بَعْضُهُمْ اِلٰى بَعْضِ ِۨالْقَوْلَۚ يَقُوْلُ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا لَوْلَآ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِيْنَ (سبإ : ٣٤)

waqāla
وَقَالَ
And say
கூறினார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பவர்கள்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
"Never will we believe
நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
bihādhā l-qur'āni
بِهَٰذَا ٱلْقُرْءَانِ
in this Quran
இந்த குர்ஆனை(யும்)
walā bi-alladhī bayna yadayhi
وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِۗ
and not in (that) which (was) before it" (was) before it"
இதற்கு முன்னுள்ளதையும்
walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
But if you (could) see
நீர் பார்த்தால்
idhi l-ẓālimūna
إِذِ ٱلظَّٰلِمُونَ
when the wrongdoers
சமயத்தை/அநியாயக்காரர்கள்
mawqūfūna
مَوْقُوفُونَ
will be made to stand
நிறுத்தி வைக்கப்பட்டவர்கள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
before their Lord
தங்கள் இறைவன் முன்னால்
yarjiʿu
يَرْجِعُ
will throw back
எதிர்த்துப் பேசுவார்(கள்)
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
அவர்களில் சிலர்
ilā baʿḍin
إِلَىٰ بَعْضٍ
to others
சிலரிடம்
l-qawla
ٱلْقَوْلَ
the word
பேசுவது
yaqūlu
يَقُولُ
Will say
கூறுவார்கள்
alladhīna us'tuḍ'ʿifū
ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
those who were oppressed
பலவீனர்கள்
lilladhīna is'takbarū
لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟
to those who were arrogant
பெருமை அடித்தவர்களுக்கு
lawlā antum
لَوْلَآ أَنتُمْ
"If not (for) you
நீங்கள் இல்லை என்றால்
lakunnā
لَكُنَّا
certainly we (would) have been
நாங்கள் ஆகியிருப்போம்
mu'minīna
مُؤْمِنِينَ
believers"
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Wa qaalal lazeena kafaroo lan nu'mina bihaazal Quraani wa laa billazee baina yadayh; wa law taraaa iziz zaalimoona mawqoofoona 'inda Rabbihim yarji'u ba'duhum ilaa ba'dinil qawla yaqoolul lazeenas tud'ifoo lillazeenas takbaroo law laaa antum lakunnaa mu'mineen (QS. Sabaʾ:31)

English Sahih International:

And those who disbelieve say, "We will never believe in this Quran nor in that before it." But if you could see when the wrongdoers are made to stand before their Lord, refuting each others' words... Those who were oppressed will say to those who were arrogant, "If not for you, we would have been believers." (QS. Saba, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நாங்கள் இந்தக் குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் (நம்பமாட்டோம்)" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக் காரர்கள் தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு அவர்களில் (சிலர் சிலரை நிந்திப்பதையும்) பலவீனமானவர்கள் கர்வம் கொண்ட வர்களை நோக்கி "நீங்கள் இல்லாவிடில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்" என்று கூறுவதையும் நீங்கள் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்கள்). (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

“இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்” என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக் காரார்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனையும் இதற்கு முன்னுள்ளதையும் (-முந்திய வேதங்களையும்) நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து (பதில்) பேசுகின்ற சமயத்தை நீர் பார்த்தால்... (அக்காட்சி மிக மோசமாக இருக்கும்). பெருமை அடித்தவர்களுக்கு பலவீனர்கள் கூறுவார்கள், “நீங்கள் இல்லை என்றால் நாங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்.”