Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩

Qur'an Surah Saba Verse 3

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَأْتِيْنَا السَّاعَةُ ۗقُلْ بَلٰى وَرَبِّيْ لَتَأْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِۙ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَآ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَآ اَكْبَرُ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍۙ (سبإ : ٣٤)

waqāla
وَقَالَ
But say
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
lā tatīnā
لَا تَأْتِينَا
"Not will come to us
எங்களிடம் வராது
l-sāʿatu
ٱلسَّاعَةُۖ
the Hour"
மறுமை
qul
قُلْ
Say
கூறுவீராக!
balā
بَلَىٰ
"Nay
ஏன் (வராது)
warabbī
وَرَبِّى
by my Lord
என் இறைவன் மீது சத்தியமாக
latatiyannakum
لَتَأْتِيَنَّكُمْ
surely it will come to you
நிச்சயமாக அது உங்களிடம் வரும்
ʿālimi
عَٰلِمِ
(He is the) Knower
நன்கறிந்தவனாகிய
l-ghaybi
ٱلْغَيْبِۖ
(of) the unseen"
மறைவானவற்றை
lā yaʿzubu
لَا يَعْزُبُ
Not escapes
எதுவும் மறைந்துவிடாது
ʿanhu
عَنْهُ
from Him
அவனை விட்டும்
mith'qālu
مِثْقَالُ
(the) weight
அளவும்
dharratin
ذَرَّةٍ
(of) an atom
அணு
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களிலும்
walā fī l-arḍi
وَلَا فِى ٱلْأَرْضِ
and not in the earth
பூமியிலும்
walā aṣgharu
وَلَآ أَصْغَرُ
and not smaller
சிறியது இல்லை
min dhālika
مِن ذَٰلِكَ
than that
அதை விட
walā akbaru
وَلَآ أَكْبَرُ
and not greater
பெரியது இல்லை
illā
إِلَّا
but
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
(is) in a Record
பதிவேட்டில் இருந்தே
mubīnin
مُّبِينٍ
Clear
தெளிவான

Transliteration:

Wa qaalal lazeena kafaroo laa taateenas Saa'ah; qul balaa wa Rabbee lataatiyannakum 'Aalimul Ghaib; laa ya'zubu 'anhu misqaalu zarratin fis samaawaati wa laa fil ardi wa laaa asgharu min zaalika wa laaa akbaru illaa fee kitaabim mubeen (QS. Sabaʾ:3)

English Sahih International:

But those who disbelieve say, "The Hour will not come to us." Say, "Yes, by my Lord, it will surely come to you. [Allah is] the Knower of the unseen." Not absent from Him is an atom's weight within the heavens or within the earth or [what is] smaller than that or greater, except that it is in a clear register – (QS. Saba, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(எனினும்) "மறுமை நமக்கு வராது" என்று இந்நிராகரிப் பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அது வரும். என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும். என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩)

Jan Trust Foundation

எனினும் நிராகரிப்பவர்கள்| “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“மறுமை எங்களிடம் வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக! ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். அவனை விட்டும் வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் (அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர இல்லை.