Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௮

Qur'an Surah Saba Verse 28

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا كَاۤفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ (سبإ : ٣٤)

wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
And not We have sent you
உம்மை நாம் அனுப்பவில்லை
illā
إِلَّا
except
தவிர
kāffatan
كَآفَّةً
inclusively
அனைவருக்கும்
lilnnāsi
لِّلنَّاسِ
to mankind
மக்கள்
bashīran
بَشِيرًا
(as) a giver of glad tidings
நற்செய்தி சொல்பவராக(வும்)
wanadhīran
وَنَذِيرًا
and (as) a warner
எச்சரிப்பவராகவும்
walākinna
وَلَٰكِنَّ
But
என்றாலும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்கள்
l-nāsi
ٱلنَّاسِ
[the] people
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Wa maaa arsalnaaka illaa kaaffatal linnaasi basheeranw wa nazeeranw wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. Sabaʾ:28)

English Sahih International:

And We have not sent you except comprehensively to mankind as a bringer of good tidings and a warner. But most of the people do not know. (QS. Saba, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை. (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம்மை மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்பவராகவும் எச்சரிப்பவராகவும் தவிர நாம் அனுப்பவில்லை. என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.