Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௭

Qur'an Surah Saba Verse 27

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرُوْنِيَ الَّذِيْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَاۤءَ كَلَّا ۗبَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
arūniya
أَرُونِىَ
"Show me
எனக்கு அறிவியுங்கள்
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்கள்
alḥaqtum
أَلْحَقْتُم
you have joined
நீங்கள் சேர்ப்பித்தீர்கள்
bihi
بِهِۦ
with Him
அவனுடன்
shurakāa
شُرَكَآءَۖ
(as) partners
இணைகளாக
kallā
كَلَّاۚ
By no means!
ஒருக்காலும் முடியாது
bal
بَلْ
Nay
மாறாக
huwa
هُوَ
He
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise"
மகா ஞானவான்

Transliteration:

Qul arooniyal lazeena alhaqtum bihee shurakaaa'a kallaa; bal Huwal Laahul 'Azeezul Hakeem (QS. Sabaʾ:27)

English Sahih International:

Say, "Show me those whom you have attached to Him as partners. No! Rather, He [alone] is Allah, the Exalted in Might, the Wise." (QS. Saba, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "அல்லாஹ்வுக்கு இணையானவையென(க் கூறி) நீங்கள் அவனுக்குச் சமமாகச் சேர்த்து வைக்கின்றீர்களே அவைகளை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்" (என்று கேட்டு "அவனுக்கு ஒருவருமே இணை) இல்லை. அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வாகும்" என்று கூறுங்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

“அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” என்றும் சொல்லும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அவனுடன் இணை(தெய்வங்)களாக நீங்கள் சேர்ப்பித்தவர்கள் பற்றி எனக்கு அறிவியுங்கள். ஒருக்காலும் (அவனுக்கு இணைகள் இருக்க) முடியாது. மாறாக, அவன்தான் அல்லாஹ் (வணங்கத்தகுதியான படைத்து பரிபாலிக்கின்ற இணையற்ற ஒரே ஓர் இறைவன்), மிகைத்தவன், மகா ஞானவான்.