Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௧

Qur'an Surah Saba Verse 21

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطَانٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِيْ شَكٍّ ۗوَرَبُّكَ عَلٰى كُلِّ شَيْءٍ حَفِيْظٌ ࣖ (سبإ : ٣٤)

wamā kāna
وَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
lahu
لَهُۥ
for him
அவனுக்கு
ʿalayhim
عَلَيْهِم
over them
அவர்கள் மீது
min sul'ṭānin
مِّن سُلْطَٰنٍ
any authority
அறவே அதிகாரம்
illā
إِلَّا
except
இருந்தாலும்
linaʿlama
لِنَعْلَمَ
that We (might) make evident
நாம் அறிவதற்காக
man
مَن
who
எவர்
yu'minu
يُؤْمِنُ
believes
நம்புகின்றார்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையை
mimman
مِمَّنْ
from (one) who
இருந்து/எவர்கள்
huwa
هُوَ
[he]
அவர்(கள்)
min'hā
مِنْهَا
about it
அதில்
fī shakkin
فِى شَكٍّۗ
(is) in doubt
சந்தேகத்தில்
warabbuka
وَرَبُّكَ
And your Lord
உமது இறைவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
over all things
எல்லாவற்றையும்
ḥafīẓun
حَفِيظٌ
(is) a Guardian
கண்காணிக்கின்றவன்

Transliteration:

Wa maa kaana lahoo 'alaihim min sultaanin illaa lina'lama mai yu minu bil Aakhirati mimman huwa minhaa fee shakk; wa Rabbuka 'alaa kulli shai'in Hafeez (QS. Sabaʾ:21)

English Sahih International:

And he had over them no authority except [it was decreed] that We might make evident who believes in the Hereafter from who is thereof in doubt. And your Lord, over all things, is Guardian. (QS. Saba, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு யாதொரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறிவித்து விடுவதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உங்களது இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவனாக இருக்கிறான். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்புகின்றவரை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களில் இருந்து (பிரித்து) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிக்கின்றவன் ஆவான்.