Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௮

Qur'an Surah Saba Verse 18

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِيْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَۗ سِيْرُوْا فِيْهَا لَيَالِيَ وَاَيَّامًا اٰمِنِيْنَ (سبإ : ٣٤)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
நாம் ஏற்படுத்தினோம்
baynahum
بَيْنَهُمْ
between them
அவர்களுக்கு இடையிலும்
wabayna
وَبَيْنَ
and between
இடையிலும்
l-qurā
ٱلْقُرَى
the towns
ஊர்களுக்கு
allatī bāraknā
ٱلَّتِى بَٰرَكْنَا
which We had blessed
நாம் அருள்வளம் புரிந்த
fīhā
فِيهَا
in it
அவற்றில்
quran
قُرًى
towns
பல ஊர்களை
ẓāhiratan
ظَٰهِرَةً
visible
தெளிவாகத் தெரியும்படியான
waqaddarnā
وَقَدَّرْنَا
And We determined
நிர்ணயித்தோம்
fīhā
فِيهَا
between them
அவற்றில்
l-sayra
ٱلسَّيْرَۖ
the journey
பயணத்தை
sīrū
سِيرُوا۟
"Travel
பயணியுங்கள்
fīhā
فِيهَا
between them
அவற்றில்
layāliya
لَيَالِىَ
(by) night
பல இரவுகளும்
wa-ayyāman
وَأَيَّامًا
and (by) day
பல பகல்களும்
āminīna
ءَامِنِينَ
safely"
பாதுகாப்பு பெற்றவர்களாக

Transliteration:

Wa ja'alnaa bainahum wa bainal qural latee baaraknaa feehaa quran zaahiratanw wa qaddamaa feehas sayr; seeroo feehaa la yaalirya wa aiyaaman aamineen (QS. Sabaʾ:18)

English Sahih International:

And We placed between them and the cities which We had blessed [many] visible cities. And We determined between them the [distances of] journey, [saying], "Travel between them by night or by day in safety." (QS. Saba, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய ஊருக்கும் நாம் அருள்புரிந்த (ஸிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவைகளில் பாதைகளையும் அமைத்து "இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறியிருந்தோம்). (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்பு பெற்றவர்களாக பயணியுங்கள்.